அமைதிக்கான நோபல் பரிசை டிரம்பிற்கு அர்ப்பணிக்கிறேன்: மரியா கொரினா மச்சாடோ
அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு அர்ப்பணிப்பதாக மரியா கொரினா மச்சாடோ அறிவித்துள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசு
உலகளவில் உயரிய அங்கீகாரமாக கருதப்படும் நோபல் பரிசுகள் இயற்பியல், வேதியல் மற்றும் கணிதம் போன்ற பல துறைகளை சேர்ந்த அதன் நிபுணர்களுக்கு ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன, இதில் இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டின் அரசியல்வாதி மற்றும் எதிர்கட்சி தலைவரான மரியா கொரினா மச்சாடோ(Maria Corina Machado) என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏமாற்றத்தில் டிரம்ப்
இந்த ஆண்டு கடந்த 6 மாதங்களில் மட்டும் 7 போர்களை தடுத்து நிறுத்தியதாக அறிவித்ததோடு மட்டுமல்லாமல், இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வழங்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது விருப்பத்தை நேரடியாகவே வெளிப்படுத்தி வந்தார்.
இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினா மச்சாடோ-வுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அவரது கனவு கானல் நீராக மாறியுள்ளது.
இதையடுத்து கருத்து தெரிவித்து இருந்த அமெரிக்க வெள்ளை மாளிகை, அமைதியை விட அரசியலுக்கே முன்னுரிமை என்பதை நோபல் கமிட்டி நிரூபித்து இருப்பதாக விமர்சித்துள்ளது.
நோபல் பரிசு டிரம்பிற்கு சமர்பணம்
இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மரியா கொரினா மச்சாடோ, இந்த உயரிய மரியாதையை வெனிசுலா மக்களுக்கும், தனக்கு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் சமர்ப்பிப்பதாக அறிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |