பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் - ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் கலக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பஞ்சு மிட்டாயில் ஆபத்தான ரசாயனம்
பஞ்சு மிட்டாயில் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் சேர்க்கப்படுவதாக புகார்கள் எழுத்தொடங்கியதனால், சென்னை மெரினா கடற்கரையில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாயை உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை செய்துள்ளனர்.
அந்த ஆய்வின் முடிவில் ஆபத்தான ரசாயனம் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
தீப்பெட்டி மற்றும் ஊதுபத்தில் செய்வதற்கு பயன்படுத்தப்படும் 'ரோடமின் பி' என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ரசாயனமானது வயிற்றுக்குள் சென்றால் புற்றுநோய் ஏற்படும் ஆபாயம் அதிகமாக இருக்கும் எனவும் தெரியவந்துள்ளது.
பஞ்சு மிட்டாய் ரோஸ், சிவப்பு என கண்ணை பறிக்கும் நிறத்தில் இருப்பதற்காக நிறச்சாயங்கள் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் 'ரோடமின் பி' குறைந்த விலை என்பதால், இது போன்ற ஆபத்தான ரசாயனங்களை பஞ்சு மிட்டாயில் வியாபாரிகள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.
எனவே பஞ்சு மிட்டாய் விற்பனையாளர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |