உக்ரைனுக்கு ஆதரவாக ரிவி நேரலையில் போராட்டம் செய்த ரஷ்ய பத்திரிக்கையாளர் கைது!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நேரலை தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சி ஒன்றில் போராட்டம் நடத்தி, போருக்கு எதிரான வீடியோவை வெளியிட்ட ரஷ்ய பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டு, பின்னர் அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சேனல் 1 செய்தி தொலைக்காட்சியில் மெரினா ஓவ்ஸ்யானிகோவா (Marina Ovsyannikova), திங்களன்று "NO War " என்ற பதாகையை ஏந்தியவாறு செட்டுக்குள் ஓடியதால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் தன்னிடம் 14 மணிநேரம் விசாரிக்கப்பட்டதாகவும், இரண்டு நாட்களாக தூங்கவில்லை என்றும், சட்ட உதவிக்கு அணுகல் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
Images via Marina Ovsyannikova/Facebook and Twitter)
விசாரணைக்கு பிறகு, எதிர்ப்புச் சட்டங்களை மீறியதற்காக ரஷ்ய நீதிமன்றம் 30,000 ரூபிள் (£215) அபராதம் விதித்தது.
ரஷ்ய தொலைக்காட்சி பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மற்றும் மேற்கத்திய தலைவர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்ற எதிர்ப்புச் செயலுக்கு ஒப்பீட்டளவில் இது சிறிய தண்டனை அபராதம் என்று கூறலாம்.
உக்ரைன் போரில் லண்டன் கமெராமேன் உட்பட 2 பத்திரிகையாளர்கள் மரணம்