ருமேனியா துறைமுகத்தில் வெடித்து சிதறிய கடல்சார் ட்ரோன்: பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்
ருமேனியாவின் கான்ஸ்டண்டா துறைமுகத்தில் கடல்சார் ட்ரோன் திடீரென வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெடித்து சிதறிய ட்ரோன்
இன்று காலை 10.30 மணியளவில்(உள்ளூர் நேரப்படி) ருமேனியாவின் கான்ஸ்டண்டா துறைமுகத்தில் 78வது கப்பல் துறையில் கடல்சார் ட்ரோன் ஒன்று வெடித்து சிதறியுள்ளது.
இந்த சம்பவத்தை வெள்ளிக்கிழமை தேசிய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெடித்து சிதறிய ட்ரோன் உக்ரைன் போரில் பயன்படுத்தப்படும் வகையை சேர்ந்தது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அத்துடன் சமீபத்தில் கருங்கடல் பகுதியில் நடைபெற்ற ருமேனிய ராணுவப் பயிற்சிக்கும், தற்போது நிகழ்ந்துள்ள ட்ரோன் சம்பவத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று ஊடக வதந்திகளுக்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |