30 திமிங்கலங்கள் கருணைக்கொலை செய்யப்படலாம்: கனடா அரசுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்
நயாகரா அருவி பொழுதுபோக்கு பூங்காவிற்கு கனடா பெடரல் அரசு நிதி உதவி வழங்காவிட்டால், 30 பெலுகா திமிங்கலங்களை கருணைக்கொலை செய்ய வேண்டியிருக்கும் என மரைன்லேண்ட் அச்சுறுத்தியுள்ளது.
மரைன்லேண்ட்
சீனாவில் உள்ள ஒரு தீம் பார்க்கிற்கு அந்த திமிங்கலங்களை மாற்றுவதை கனடாவின் மீன்வளத்துறை அமைச்சர் தடுத்துள்ள நிலையிலேயே கருணைக்கொலை குறித்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மரைன்லேண்ட் என்பது ஒன்ராறியோவில் கிட்டத்தட்ட 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்கா, மிருகக்காட்சிசாலை, நீர்வாழ் காட்சிசாலை மற்றும் காடு. இங்கு விலங்குகள் மோசமான நிலையில் பராமரிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
முன்பு பல மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்த இந்த அருங்காட்சியகம் கோடை காலத்திற்கு திறக்கப்படவில்லை மற்றும் விற்பனையை எதிர்பார்த்து அதன் செயல்பாடுகளை குறைத்து வருகிறது.
இந்த நிலையில், இங்குள்ள பெலுகா திமிங்கலங்கள் தொடர்பில் ஆர்வலர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி வந்தனர். மட்டுமின்றி, கடந்த 2019 முதல் பூங்காவில் இருபது திமிங்கலங்கள், 19 பெலுகாக்கள் மற்றும் ஒரு ஓர்கா ஆகியவை இறந்துள்ளன.
நிதி நெருக்கடி
இதனிடையே, சீன நகரமான ஜுஹாயில் உள்ள சிமெலாங் Ocean Kingdom த்திற்கு திமிங்கலங்களை அனுப்ப திட்டமிட்டிருந்ததாக மரைன்லேண்ட் கூறுகிறது, ஆனால் கனடாவின் மீன்வளத்துறை அமைச்சர் ஜோன் தாம்சன் கடந்த வாரம் இந்த நடவடிக்கையைத் தடுத்தார்.
இந்த நிலையில், கடனில் மூழ்கியுள்ள பூங்கா ஒரு முக்கியமான நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், திமிங்கலங்களுக்கு போதுமான பராமரிப்பை வழங்குவதற்கான நிதி ஆதரவு இல்லை என்றும் மரைன்லேண்ட் வெளியிட்ட கடிதம் ஒன்றில் எச்சரித்தது.
அக்டோபர் 7 ஆம் திகதிக்குள் பெடரல் அரசு பூங்காவிற்கு நிதியளிக்கவோ அல்லது திமிங்கலங்களை ஏற்றுமதி செய்வதற்கு அங்கீகாரம் அளிக்கவோ தவறினால், பெலுகா திமிங்கலங்களை கருணைக்கொலை செய்யும் பேரழிவு தரும் முடிவை மரைன்லேண்ட் எதிர்கொள்ளும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |