உணவின்றி தவிக்கும் உக்ரேனியர்கள்.. மனிதாபிமான வழித்தடங்களில் அட்டூழியம் செய்யும் ரஷ்யா
போர் நிறுத்தத்தை மீறி மக்கள் வெளியேறும் மனிதாபிமான வழித்தடங்களில் ரஷ்ய குண்டு போடுவதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பொதுமக்கள் வெளியேற அனுமதிக்கும் மனிதாபிமான வழித்தடங்கள் திட்டங்களுக்கு ரஷ்யா-உக்ரைன் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.
இந்நிலையில், Mariupol நகரத்திலிருந்து Zaporizhzhia வரையிலான மனிதாபிமான வழித்தடத்தில், போர் நிறுத்தத்தை மீறி ரஷ்ய படைகள் குண்டு போட்டு வருவதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Mariupol நகரத்திற்கு மனிதாபிமான உதவி வழங்குவதற்கும், அங்கிருந்து Zaporizhzhia-வுக்கு மக்களை வெளியேறுவதற்கும் 8 டிரக்குகள், 30-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தயாராக இருக்கிறது.
Ceasefire violated! Russian forces are now shelling the humanitarian corridor from Zaporizhzhia to Mariupol. 8 trucks + 30 buses ready to deliver humanitarian aid to Mariupol and to evac civilians to Zaporizhzhia. Pressure on Russia MUST step up to make it uphold its commitments.
— MFA of Ukraine ?? (@MFA_Ukraine) March 8, 2022
Mariupol நகரில் பொதுமக்கள் தண்ணீர் அல்லது மின்சாரம் இல்லாமல் ஏறக்குறைய ஒரு வாரமாக தவித்து வருகின்றனர் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
உக்ரைனில் இதற்கு முந்தைய நாட்களில் அமுலுக்கு வந்த தற்காலிக போர் நிறுத்தமும் மீறப்பட்டது குறிப்பிடத்தக்கது.