ஆயிரக்கணக்கான உக்ரேனிய மக்களை தங்கள் நாட்டிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற ரஷ்யா!
மரியுபோலில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ரஷ்யாவில் உள்ள நகரங்களுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாக உக்ரேனிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Livoberezhniy மாவட்டம் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்குமிடமாக பயன்படுத்தி வந்த விளையாட்டு கிளப் கட்டிடத்தில் இருந்து, ரஷ்யா சட்டவிரோதமாக மக்களை அழைத்துச் சென்றது என்று மரியுபோல் நகர சபை கூறியுள்ளது.
மரியுபோலில் இருந்து அகதிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் செவ்வாயன்று ரஷ்யாவிற்கு வரத் தொடங்கியதாக ரஷ்யா கூறியது.
தற்போது ரஷ்யா சட்டவிரோதமாக மக்களை அழைத்துச் சென்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
4,500 பேர் வரை தென்மேற்கு ரஷ்யாவில் உள்ள ஒரு துறைமுக நகரமான Taganrog-க்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பாஸ்போர்ட் இல்லாமல் மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய படைகளின் தொடர் தாக்குதலை எதிர்கொண்டு வரும் மரியுபோல் நகரில், பிப்ரவரி 24ம் திகதி முதல் 2400 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.