பாரா ஆசியப்போட்டியில் வெள்ளி வென்ற தமிழன் மாரியப்பன்!
சீனாவில் தொடங்கிய பாரா ஆசியப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார்.
பாரா ஆசியப்போட்டிகள் சீனாவின் ஹாங்சோவில் நேற்று தொடங்கியது. 28ஆம் திகதி வரை இந்தப் போட்டிகள் நடக்கின்றன.
இந்தியாவின் சார்பில் 303 வீரர், வீராங்கனைகள் இதில் கலந்துகொள்ள அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் 191 பேர் ஆண்கள், 112 பேர் பெண்கள் ஆவர்.
ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய வீரர்களே தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய மூன்று பதக்கங்களையும் வென்று அசத்தியுள்ளனர்.
சைலேஷ் குமார் 1.82 மீற்றர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தையும், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு (1.80 மீ) வெள்ளியையும், ராம் சிங் வெண்கலத்தையும் கைப்பற்றினர்.
2016ஆம் ஆண்டு ரியோவில் தங்கமும், 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் வெள்ளியும் வென்றிருந்த மாரியப்பன் தற்போது மீண்டும் வெள்ளியை வென்றுள்ளார்.
இந்த நிலையில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கூறி ட்வீட் செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |