கனடாவின் 24வது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்பு
கனடாவின் 24வது பிரதமராக மார்க் கார்னி (Mark Carney) பதவியேற்றார்.
Bank of Canada மற்றும் Bank of England என இரண்டு மிகப்பெரிய நாடுகளின் மத்திய வங்கிகளின் ஆளுநராக இருந்த மார்க் கார்னி, கனடாவின் 24வது பிரதமராக பதவியேற்றுள்ளார்.
லிபரல் கட்சியின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கவர்னர் மேரி சைமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கார்னி மற்றும் அவரது 23 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
நியமனங்கள் மற்றும் அரசியல் சூழல்
கார்னி, முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் (Justin Trudeau) சில முக்கிய அமைச்சர்களை தொடர்ச்சியாக பதவியில் வைத்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சர் David McGuinty மற்றும் வெளிநாட்டு அமைச்சர் Melanie Joly ஆகியோர் புதிதாக உருவாகிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
பதவியேற்ற பிறகு, "கனடாவின் எதிர்காலத்தை பாதுகாக்கும், பொருளாதாரத்தை வலுப்படுத்தும் சிறிய, திறமையான அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது" என்று கார்னி கூறினார்.
வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன்னதாக கார்னி, தற்காலிக பிரதமராகவே செயல்படுவார் எனக் கூறப்படுகிறது.
லிபரல் கட்சி மற்றும் கன்சர்வேடிவ் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கார்னி விரைவில் பொதுத் தேர்தலை அறிவிக்கலாம் என்று ராய்ட்டர்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.
அவர் தேர்தலை காலதாமதப்படுத்தினால், எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து அவரது ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரலாம்.
இதனால், கனடாவின் எதிர்கால அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை மிகுந்த பரபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |