170 மில்லியன் டொலர் Billionaire Bunker மாளிகையை வாங்கிய மார்க் சுக்கர்பெர்க்
170 மில்லியன் டொலர் Billionaire Bunker மாளிகையை மார்க் சுக்கர்பெர்க் வாங்கியுள்ளார்.
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சுக்கர்பெர்க், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி நகரின் Billionaire Bunker என அழைக்கப்படும் மிகுந்த பாதுகாப்பு கொண்ட தீவு பகுதியில், 170 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மாளிகையை வாங்கியுள்ளார்.

இந்த தீவு, உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் வசிக்கும் Ultra-Secure Enclave ஆகும்.
இங்கு தனியார் துறைமுகம், தனித்துவமான பாதுகாப்பு, 24 மணி நேர கண்காணிப்பு ஆகிய வசதிகள் உள்ளன.
சுக்கர்பெர்க் வாங்கிய மாளிகை, 15,000 சதுர அடியில் பரவியுள்ள பிரமாண்ட கட்டிடம். இதில் பல நீச்சல் குளங்கள், தனியார் கடற்கரை, உடற்பயிற்சி கூடம், சினிமா ஹால் போன்ற வசதிகள் உள்ளன.
இந்த தீவு, Indian Creek Island என அழைக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய பணக்காரர்களான Tom Brady, Ivanka Trump, Jared Kushner போன்றோர் இங்கு வீடுகளை வைத்துள்ளனர்.
சுக்கர்பெர்க், ஏற்கனவே ஹவாய் மற்றும் கலிபோர்னியாவில் பல சொத்துகளை வைத்திருக்கிறார். இந்த புதிய மாளிகையை வாங்குவதன் மூலம், அவரது சொத்து மதிப்பை மேலும் உயர்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |