தற்காப்புக் கலைப் பயிற்சியின்போது விபரீதம்; Meta சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்கிற்கு முழங்காலில் அறுவை சிகிச்சை
மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
கலப்பு தற்காப்புக் கலைப் போட்டிக்கான பயிற்சியின் போது தனது முழங்காலில் காயம் ஏற்பட்டதாக ஜுக்கர்பெர்க் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்காக ஜுக்கர்பெர்க் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஜுக்கர்பெர்க் தனது இடது காலில் மருத்துவமனை படுக்கையில் கட்டு மற்றும் ஆதரவான கால் பிரேஸுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள எம்எம்ஏ சண்டைக்கான பயிற்சியின் போது காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.
ஜுக்கர்பெர்க் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில், "முழங்கால் காயத்தில் இருந்து ACL அறுவை சிகிச்சை மூலம் உயிர் பிழைத்தேன்.. என்னை மிகவும் கவனித்துக்கொண்ட மருத்துவக் குழுவினருக்கு நன்றி. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் எம்எம்ஏ சண்டைக்கு பயிற்சி எடுத்து வருகிறேன். இப்போது சற்று தாமதமானது. காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்த பிறகு மீண்டும் பயிற்சியை தொடங்குவேன். இந்த நேரத்தில் அன்பையும் ஆதரவையும் அளித்த அனைவருக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.
ஸ்டான்போர்ட் மெடிசின் படி, ACL அறுவை சிகிச்சையிலிருந்து முழுமையாக குணமடைய பல மாதங்கள் ஆகும். இதற்கு சுமார் 9 முதல் 12 மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜுக்கர்பெர்க் விரைவில் குணமடைய வேண்டும் என நெட்டிசன்கள் வாழ்த்தியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Meta CEO Mark Zuckerberg underwent ACL surgery, Mark Zuckerberg Knee injury, Mark Zuckerberg MMA fight