நாசாவில் பணிபுரிந்தவருக்கே இந்த பரிதாப நிலையா? அப்போ சாதாரண மக்களின் நிலை... இந்திய பிரபலம் வெளியிட்ட பகீர் தகவல்
நாசாவில் பணிபுரிந்த தனது உறவினர் டெல்லியில் கொரோனாவால் இறந்த நிலையில் அவர் உடலை தகனம் செய்ய அங்கு இடமில்லாத சூழல் நிலவுகிறது என்ற பகீர் தகவலை மார்க்கண்டேய கட்ஜூ வெளியிட்டுள்ளார்.
இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ வெளியிட்ட டுவிட்டர் பதிவில், என் உறவினர் ஒருவர் அமெரிக்காவில் Nuclear Science படித்துள்ளார்.
அங்கு பல ஆண்டுகளாக வசித்த அவர் நாசாவில் பணிபுரிந்தார். அவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் டெல்லியில் கொரோனாவுக்கு பலியானார்.
ஆனால் டெல்லியில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எரிக்க இடமேயில்லை. தகனம் செய்யும் இடங்கள் அனைத்தும் நிரம்பி வழிகிறது.
தற்போது அவரின் உடல் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதே போல பலரின் உடல்கள் வரிசையில் காத்திருக்கின்றன. மிகுந்த சிரமத்துக்கு இடையில் நாளை காலையில் அவர் உடலை எரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.
— Markandey Katju (@mkatju) April 26, 2021