4 ஆண்களை திருமணம் செய்து சுழற்சி முறையில் தனித்தனியாக குடும்பம் நடத்தி வந்த பெண்!
திருமணமாகாத ஆண்களை தேடி ஏமாற்றிய பெண்.
மொத்தமாக 5 பேரை இதுவரை மணந்ததும், ஆறாவதாக வயதானவரை மணக்க நினைத்ததும் அம்பலம்.
தமிழகத்தின் ஒரே பெண் நான்கு ஆண்களை மணந்து கொண்டு பண மோசடி செய்த சம்பவத்தின் அதிரவைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது. இதோடு அப்பெண் சுழற்சி முறையில் நான்கு பேருடன் குடும்பம் நடத்தியதும் தெரியவந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன் (35). இவருக்கு திருமணம் செய்வதற்காக தரகர் மூலம் பெண் பார்த்துள்ளனர். அப்போது தஞ்சாவூர், அய்யம்பேட்டையை சேர்ந்த சரிதா என்ற பெண் இருப்பதாக தகவல் வந்துள்ளது.
மேலும் சரிதா ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், அவரது பெற்றோர் இறந்து விட்டதாகவும் தரகர் மூலம் தெரியவந்தது. இந்த திருமணத்திற்கு தரகர் ரூ 1 லட்சத்து 20 ஆயிரம் கமிஷன் கேட்டுள்ளார். பின்னர் கடந்த 20-ம் திகதி இருவருக்கும் ஒரு கோயிலில் வைத்து திருமணம் நடந்தது.
ஒருநாள் மனைவி சரிதாவின் மொபைலுக்கு வாட்சப்பில் ஒரு வாய்ஸ் மெசேஜை சரவணன் பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், இங்கு இருந்து வெளியே வரமுடியவில்லை என்றும், சரவணனிடம் பெரிய தொகை எதுவும் இல்லை என்றும் சரிதா கூறியுள்ளார்.
தனக்கு அடுத்ததாக வயதான ஒருவரை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யுமாறும், அந்த திருமணம் முடிந்தபின் அவரிடமிருந்து பிரிந்து வந்து மீண்டும் சரவணணிடமே இருக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து சரவணன் தனது நண்பர்களிடம் கூற, அவர்கள் கொடுத்த ஐடியா படி தனது நண்பர் ஒருவருக்கு பெண் பார்ப்பதாகவும், எதாவது பெண் இருந்தால் கூறுமாறும், தனது மனைவியிடம் கூறியுள்ளார்.
அவர் தனது பெரியம்மாவிடம் கூறி அவர் வேறொரு பெண்ணை அறிமுகம் செய்துள்ளார். பின்னர் அவரை இங்கே அழைத்து வர சரவணன் கூறியதையடுத்து பெண் தரகர் உள்ளிட்ட அனைவரும் வந்துள்ளனர். அப்போது மனைவி உள்ளிட்ட அனைவரையும் கையும் களவுமாக பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் சரிதா என்பவர் இதுவரை நான்கு பேரை திருமணம் செய்து அவர்களுடமிருந்து விலகி வந்து, தற்போது சரவணனை திருமணம் செய்தது அம்பலமாகியது. அவர்களுடன் சுழற்சி முறையில் குடும்பம் நடத்தியிருக்கிறார் எனவும் தெரியவந்தது.
மோசடி கும்பலை கைது செய்த பொலிசார் தொடர்ந்து விசாரித்து வரும் நிலையில் மேலும் பல பகீர் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.