சில்லுனு ஒரு திருமணம்! மூன்று நாட்கள் பயணித்து.. கொட்டும் பனிக்கு நடுவே மாலை மாற்றி கொண்ட இளம்ஜோடி
பொலிவியாவில் இளம்ஜோடி ஒன்று விநோத முறையில் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு அனைவரது மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியாவில் இளம்ஜோடி ஒன்று பல ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்களது திருமணம் ஓராண்டிற்கு முன்பாகவே நடந்திருக்க வேண்டியது.
ஆனால் கொரோனா காரணமாக இருவரது திருமணம் தள்ளி சென்றுள்ளது. நான்கு பக்கமும் பனிகள் கொட்டும் உச்சி மலையில் நின்று திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது இருவரின் அலாதி ஆசையாக இருந்துள்ளது.
இதனால் கொரோனா பேரழிவு காலம் முடியும் வரை இந்த ஜோடி காத்திருந்துள்ளது. கொரோனா பரவல் குறைந்ததையடுத்து இவர்கள் நினைத்தது போலவே லா பாஸ் மேற்கு பகுதியில் உள்ள இலிமானி மலையில் கொட்டி தீர்க்கும் பனிகளுக்கு நடுவே மூன்று நாட்களாக பயணித்து ஒருவழியாக திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர்.
இவர்களது திருமணத்தில் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்தனர். இவர்களது திருமண புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.