மேஷம் செல்லும் செவ்வாய்! இந்த கிரக பெயர்ச்சியால் செல்வந்தராக போகும் யோகம் எந்த ராசிக்கு அடிக்கப்போகுது தெரியுமா?

Astrology Mars Aries Zodiacs
By Balakumar Dec 29, 2020 04:36 PM GMT
Report

செவ்வாய் மீன ராசியில் இருந்து வெளியேறி, அதன் சொந்த ராசியான மேஷ ராசிக்கு இன்று காலை 11.42 மணிக்கு இடம் பெயர்கிறார்.

ஆகவே மேஷம் செல்லும் செவ்வாயால் ஒவ்வொரு ராசிகாரருக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம்.

மேஷம்

பொதுவாக செவ்வாய் முதல் வீட்டில் இருப்பது ஒரு நல்ல நிகழ்வாக கருதப்படுவதில்லை. ஆனால் மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால், முதல் வீட்டிற்கு செவ்வாய் வருவதால் நல்ல முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது.

முதல் வீட்டிற்கு வரும் செவ்வாயின் விளைவாக, உங்களின் நடத்தையில் மாற்றம் ஏற்படும் மற்றும் எந்த வேலையையும் முடிப்பதற்கு அவசரமாக செயல்படுவீர்கள்.

து உங்களுக்கு சில சிக்கலை ஏற்படுத்தலாம். எனவே எதிலும் பொறுமையாக செயல்படுங்கள். உங்களின் முரட்டுத்தனமான நடத்தை மற்றும் அணுகுமுறை காரணமாக, உங்களுக்கும், உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இடையே சிக்கல்கள் எழக்கூடும். எனவே இதில் சற்று கவனம் செலுத்துங்கள்.

இந்த காலத்தில் நீங்கள் சற்று பிடிவாதமாக இருப்பீர்கள். இதனால் குடும்ப வாழ்க்கையில் மன அழுத்தத்தை சந்திப்பீர்கள்.

இக்காலத்தில் சொத்து தொடர்பான நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. காய்ச்சல், தலைவலி போன்ற பிரச்சனைகளை சந்திக்கலாம். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்கவும். நீங்கள் உங்கள் இலக்குகளை நோக்கி கவனம் செலுத்துவீர்கள்.

மேலும் உறுதியான மனதுடன் நீங்கள் முடிவு செய்த அனைத்தையும் கொண்டு சிறப்பாக முன்னேற முடியும். அதோடு உங்கள் வேலையை நீங்கள் நேரத்திற்கு முன்பே வழங்குவீர்கள். இதன் காரணமாக நீங்கள் பாராட்டையும் பெறுவீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 7 மற்றும் 12 ஆவது வீட்டின் அதிபதியான செவ்வாய், இந்த பெயர்ச்சியின் போது 7 ஆவது வீட்டிற்கு இடம் பெயர்கிறார். இதனால் கலவையான முடிவுகளைப் பெறுவீர்கள். உங்களின் செலவுகள் பல மடங்கு அதிகரிப்பதைக் காண்பீர்கள்.

இதனால் மன அழுத்தத்தை உணர்வீர்கள். உங்கள் எதிரிகளைப் பற்றி பயப்பட தேவையில்லை. அவர்களை உறுதிகளை எதிர்கொண்டு நில்லுங்கள்.

உங்களின் இளைய உடன்பிறப்புக்களின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். இந்த காலத்தில் உங்கள் கடன்களை திருப்பி செலுத்துவதில் தீவிரமாக இருப்பீர்கள்.

உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையில் மன அழுத்த சூழ்நிலைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், செவ்வாயின் இந்த பயணம் உங்கள் திருமண வாழ்க்கையின் அடிப்படையில் அற்புதமானது என்று கூற முடியாது.

உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆக்ரோஷமான மனோபாவம் உங்களை எரிச்சலடையச் செய்யும். இதனால் உறவில் பிரச்சனைகள் காணப்படலாம்.

மிதுனம்

மிதுன ராசியின் 6 ஆவது மற்றும் 11 ஆவது வீட்டின் அதிபதியான செவ்வாய், இப்பெயர்ச்சியால் 11 ஆவது வீட்டிற்கு செல்கிறார். தனது சொந்த வீட்டிற்கு செவ்வாய் செல்வதால் இந்த காலம் சாதகமான காலமாக இருக்கும்.

உங்கள் வருமானத்தில் மிகப்பெரிய உயர்வைக் காண்பீர்கள். உங்களின் நிதி நிலைமை வலுவாகும். உங்களின் லட்சியங்கள் மற்றும் எந்த ஒரு பணிகளும் சிறப்பாக நிறைவேறும். இது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும்.

இக்காலத்தில் உங்கள் குடும்பத்தின் மீது கவனம் செலுத்துவீர்கள். ஆனால் உங்கள் காதல் வாழ்க்கையில் பிரச்சனைகள் எழுந்து, மோதல்கள் மற்றும் வாதங்களுக்கு வழிவகுக்கும். எனவே கவனமாக இருங்கள்.

இக்காலத்தில் உங்கள் குழந்தைகளின் உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம். எனவே அவர்களை சற்று கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கடன்களை திருப்பிச் செலுத்துவீர்கள். மேலும் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது.

கடகம்

கடக ராசியின் 5 ஆவது மற்றும் 10 ஆவது வீட்டின் அதிபதியான செவ்வாய், இந்த பெயர்ச்சியின் போது தனது சொந்த வீடான 10 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதன் விளைவாக இக்காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் பணித்துறையில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் மரியாதை அதிகரிக்கும்.

அலுவலகத்தில் பணிச்சுமை மற்றும் பொறுப்புக்களும் அதிகரிக்கும். உங்கள் உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் அதிகரிக்கும். உங்களின் உடல்நலம் சற்று குறையக்கூடும். உங்கள் வேலையில் மட்டுமின்றி உங்கள் ஆரோக்கியத்தின் மீதும் கவனம் செலுத்துங்கள். செவ்வாயின் இடமாற்றம் உங்கள் குடும்ப வாழ்க்கையின் சில மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

குறிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு இந்த காலத்தில் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது. அதிக பணிச்சுமை காரணமாக உங்கள் குடும்பத்திற்கு அதிக நேரம் ஒதுக்க முடியாது.

காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை, இந்த காலத்தில் உங்கள் காதலியுடனான சந்திப்புகளைக் குறைக்க நீங்கள் முயற்சி செய்யுங்கள். இல்லாவிட்டால் இருவருக்கும் இடையே உள்ள சண்டைகள் தீவிரமாகும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 9 ஆவது மற்றும் 4 ஆவது வீட்டின் அதிபதியான செவ்வாய், இப்பெயர்ச்சியின் போது 9 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதற்கு வாய்ப்புக்கள் கிடைக்கும். இந்த காலத்தில் உங்கள் தந்தை உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்படலாம்.

அத்தகைய சூழ்நிலையில் அவரது உடல்நலத்தைக் கட்டாயம் கவனித்துக் கொள்ளுங்கள். இந்த பெயர்ச்சியால் உங்கள் நடத்தையை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். இக்காலத்தில் உங்கள் உடன்பிறப்புக்களின் உடல்நலத்தில் சரிவு காணப்படும் மற்றும் அவர்கள் நன்றாக சம்பாதிப்பார்கள். செவ்வாயின் இந்த இடப்பெயர்ச்சியால் நீங்கள் எந்தவொரு சொத்தையும் வாங்குவீர்கள்.

இது குடும்ப உறுப்பினர்களிடையே மகிழ்ச்சி அலைகளை உருவாக்கி, உறவுகளை வலுப்படுத்தும். குடும்பத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். சில

கன்னி

கன்னி ராசியின் 3 ஆவது மற்றும் 8 ஆவது வீட்டின் அதிபதி தான் செவ்வாய். இந்த பெயர்ச்சியின் போது செவ்வாய் 8 ஆவது வீட்டிற்கு செல்கிறார். ஆனால் இந்த இடமாற்றம் மிகவும் சாதகமானதாக இருக்காது.

இக்காலத்தில் சிறந்த முடிவுகளைப் பெறமாட்டீர்கள். உங்களின் ஆரோக்கியம் பலவீனமாகும். இதன் காரணமாக நீங்கள் நோய்வாய்ப்படலாம். சிலருக்கு அறுவை சிகிச்சை, விபத்து அல்லது காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதைத் தவிர்க்க வழக்கமான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் இந்த பெயர்ச்சியால் பண நன்மைகள் கிடைக்கும். ஆனால் குறுக்கு வழிகளில் பணம் சம்பாதிப்பது ஒருபோதும் பலனளிக்காது என்பதை மறக்காதீர்கள்.

இந்த பெயர்ச்சி உங்கள் வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இக்காலத்தில் உங்கள் இளைய உடன்பிறப்புக்களின் உதவி உங்களுக்குத் தேவைப்படலாம்.

துலாம்

துலாம் ராசியின் 2 ஆவது மற்றும் 7 ஆவது வீட்டின் அதிபதியான செவ்வாய், இந்த பெயர்ச்சியால் 7 ஆவது வீட்டிற்கு செல்வதால், கலவையான முடிவுகளைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் நடத்தையில் கணிசமான மாற்றம் ஏற்படலாம். இது அவர்களின் நம்பிக்கை மற்றும் பொறுமையின்மையை அதிகரிக்கும்.

அதோடு மிகவும் பிடிவாதமாக இருப்பார்கள். பணிபுரிபவர்களுக்கு, இந்த பெயர்ச்சி சாதகமாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் செய்பவராயின், செல்வத்தையும், நிதி ஆதாயங்களையும் பெறுவீர்கள்.

இதனால் தொழிலை விரிவுபடுத்த வாய்ப்புக்கள் கிட்டும். ஆனால் உங்கள் வணிக கூட்டாளருடனான உங்கள் உறவு மோசமடையக்கூடும், எனவே கவனமாக இருங்கள்.உங்கள் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

இந்த காலகட்டத்தில், நீங்கள் உங்கள் வாழ்க்கை துணைக்கு நிறைய பணம் செலவழித்து, அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் முதல் மற்றும் ஆறாவது வீட்டின் அதிபதியான செவ்வாய், இப்பெயர்ச்சியின் போது 6 ஆவது வீட்டிற்கு செல்வதால், சாதகமான முடிவுகளைப் பெறுவீர்கள். உங்கள் தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும்.

நீங்கள் எடுக்கும் எந்தவொரு பணியிலும் அல்லது திட்டத்திலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள், உங்கள் கடின உழைப்பின் இனிமையான பலன்களைப் பெறுவீர்கள்.

மொத்தத்தில் நிதி நிலைமை மேம்பட்டு, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னேறுவீர்கள். நீங்கள் ஏதேனும் போட்டிக்குத் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவராக இருந்தால், இந்த நேரத்தில் வெற்றிபெற உங்களுக்கு சிறந்த வாய்ப்பு கிடைக்கும்.

ஆனால் இந்த பெயர்ச்சியின் ஒரு எதிர்மறை அம்சம் என்னவென்றால், நீங்கள் உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்படுவீர்கள்.

தனுசு

தனுசு ராசியின் 5 ஆவது மற்றும் 12 ஆவது வீட்டின் அதிபதியான செவ்வாய், இப்பெயர்ச்சியின் போது 5 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் கலவையான முடிவுகளைப் பெறுவீர்கள். இந்த செவ்வாய் இட மாற்றத்தால், உங்கள் கலைத்திறன்களை வெளிப்படுத்துவதில் எவ்வித பிரச்சனையையும் சந்திக்கமாட்டீர்கள்.

உங்களின் இந்த திறனைப் பயன்படுத்தி வருமானத்தை ஈட்டுவீர்கள். இக்காலத்தில் உங்களின் வருமானம் அதிகரிக்கும். உங்களின் நிதி நிலைமை வலுவாகும். ஆனால் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிக்கல்களை ஏற்படுத்தும்.

காதல் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படலாம். திருமணமானவராக இருந்தால், உங்கள் வாழ்க்கைத்துணை நல்ல முடிவுகளைப் பெறுவார்.

அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். இப்பெயர்ச்சி உங்கள் குழந்தைகளுக்கு சாதகமாக இருக்கும். இந்த காலத்தில் நீங்கள் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்கலாம். எனவே கவனமாக இருங்கள்.

மகரம்

மகர ராசியின் 4 ஆவது மற்றும் 11 ஆவது வீட்டின் அதிபதியான செவ்வாய், இந்த பெயர்ச்சியால் 4 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதன் விளைவாக கலவையான முடிவுகளையே பெறுவீர்கள். 4 ஆம் வீட்டில் உள்ள செவ்வாய், சொத்து தொடர்பான நன்மைகளைப் பெற உதவுவார்.

இந்த காலத்தில் சொந்த வீட்டை வாங்க வாய்ப்புள்ளது. சிலர் இக்காலத்தில் வாகனம் வாங்க வாய்ப்புள்ளது. மாறாக இந்த பெயர்ச்சி, உங்கள் தாயின் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும். இந்த காலத்தில் குடும்பத்தில் இடையூறுகளை சந்திக்க நேரிடலாம்.

எனவே குடும்பத்தின் தேவைகள் மற்றும் பொறுப்புக்களில் சற்று அதிக கவனம் செலுத்துங்கள். செவ்வாய் உங்கள் தொழில் வாழ்க்கையை பாதிக்கும். அதுவும் பணியிடத்தில் உங்களை சிக்கல்களில் சிக்க வைக்கும்.

அம்மாதிரியான சூழ்நிலையில் பொறுமையாக இருங்கள். இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத்துணையுடனான உறவு மோசமடையக்கூடும்.

அதனால் எச்சரிக்கையாக இருங்கள். எதற்கும் வாதாடுவதைத் தவிர்த்திடுங்கள். முக்கியமாக இக்காலத்தில் உங்களின் வருமானம் அதிகரிக்கும்.

கும்பம்

கும்ப ராசியின் 3 ஆவது மற்றும் 10 ஆவது வீட்டின் அதிபதியான செவ்வாய், மூன்றாவது வீட்டிற்கு செல்கிறார்.

இதன் விளைவாக நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். இந்த பெயர்ச்சியால், உங்கள் தைரியமும், வலிமையும் அதிகரிக்கும். அதே சமயம் உங்கள் உடன்பிறப்புகளின் நம்பிக்கையும் உயர்வாக இருக்கும்.

மேலும் அவர்கள் ஒவ்வொரு பணியிலும் உங்களை ஆதரிப்பார்கள். உங்களின் கடின உழைப்பினால் அசாதாரண முடிவுகளைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில், நீங்கள் உங்கள் எதிரிகளை வெல்வீர்கள்.

உங்களுக்கு எதிராக அவர்களால் எதையும் செய்ய முடியாது. நீங்கள் ஒரு விளையாட்டு வீரராக இருந்தால், வெற்றியின் உயரத்தை அடைவீர்கள்.

இந்த செவ்வாய் இட மாற்றத்தால் நிறைய பயணத்தை மேற்கொள்வீர்கள். உங்களின் நண்பர் வட்டாரம் விரிவடையும். உங்களுக்கு கொடுக்கப்படும் வேலையை சிறப்பாக செய்வீர்கள்.

மீனம்

மீன ராசியின் 2 ஆவது மற்றும் 9 ஆவது வீட்டின் அதிபதியான செவ்வாய், இந்த பெயர்ச்சியால் 2 ஆவது வீட்டிற்கு செல்கிறார்.

இதன் விளைவாக அவ்வளவு சிறப்பான காலமாக இருக்காது. இருப்பினும், இந்த பெயர்ச்சியின் விளைவாக வாழ்வில் செல்வத்தை ஈட்டுவீர்கள். இதனால் உங்களின் நிதி நிலைமை வெகுவாக மேம்படும்.

அதிர்ஷ்டம் முற்றிலும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணப்பற்றாக்குறை இல்லாமல் எந்த ஒரு பணியையும் சிறப்பாக செய்வீர்கள். இக்காலத்தில் சமுதாயத்தில் உங்களின் நற்பெயரும், அந்தஸ்தும் அதிகரிக்கும்.

ஆனால் குடும்பத்தில் பதட்டங்கள் எழும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் தகராறில் ஈடுபடலாம்.

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கூற முடியாது. இக்காலத்தில் காரமான அல்லது பொரித்த உணவுகளைத் தவித்திடுங்கள். இல்லாவிட்டால் உடல்நலம் மோசமாக பாதிக்கப்படும்.

இந்த பெயர்ச்சி உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்பதால், அவர்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க முடிவுகளைப் பெறுவீர்கள்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US