டென்னிஸ் உலக உச்ச நட்சத்திரம் மார்டினா நவரத்திலோவா வெளியிட்ட உருக்கமான தகவல்
எக்காலத்திலும் சிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவரென உலக ரசிகர்களால் கொண்டாடப்படும் அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் மார்டினா நவரத்திலோவா நெகிழவைக்கும் உருக்கமான தகவல் ஒன்றி வெளியிட்டுள்ளார்.
புற்றுநோயை வென்றுவிட்டதாக பதிவு
நியூயார்க்கின் புற்றுநோய் மையம் ஒன்றில் இருந்து தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட அவர், தாம் புற்றுநோயை முற்றிலுமாக வென்றுவிட்டதாக பதிவு செய்துள்ளார். மட்டுமின்றி, மருத்துவர்கள், நர்ஸ்கள் உட்பட மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் தமது நன்றியை தெரிவித்துள்ளார்.
@AP
66 வயதான நவரத்திலோவா கடந்த ஜனவரி மாதம் தொண்டை மற்றும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திருந்தார். அத்துடன் ஜனவரி மாதத்தில் இருந்தே, சிகிச்சையும் தொடங்கியிருந்தார்.
18 முறை தனியொருவராக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள நவரத்திலோவா கடந்த நவம்பர் மாதம் தமக்கு தொண்டையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதை பதிவு செய்திருந்தார்.
59 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்
இருப்பினும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் தொடர்ந்து கலந்துகொண்டார். இந்த நிலையில் தான் மார்பக புற்றுநோய் பாதிப்பையும் அவர் உறுதி செய்திருந்தார்.
@AP
தற்போது தாம் புற்றுநோயில் இருந்து விடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்லார். மொத்தமாக 59 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நவரத்திலோவா, அதில் 31 மகளிர் இரட்டையர் போட்டிகளிலும், 10 எண்ணிக்கையில் கலப்பு இரட்டையர் போட்டிகளிலும் வென்றுள்ளார்.
2006ல் அவர் ஓய்வை அறிவிக்கும் முன்னர் இறுதியாக Bob Bryan என்பவருடன் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |