மாருதி சுசுகியின் e-Vitara எலக்ட்ரிக் கார் 12 ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி
மாருதி சுசுகியின் e-Vitara எலக்ட்ரிக் கார்கள் 12 ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தனது முதல் மின்சார வாகனமான e-Vitaraவை 2025 ஆகஸ்ட் மாதத்தில் 12 ஐரோப்பிய நாடுகளுக்கு 2,900 யூனிட்கள் ஏற்றுமதி செய்துள்ளது.
இது இந்தியாவின் மின்சார வாகன ஏற்றுமதியில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும்.
இந்த வாகனங்கள் குஜராத்தின் ஹன்சல்பூர் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு, பிபாவாவ் துறைமுகம் வழியாக பிரித்தானியா, ஜேர்மனி, நோர்வே, பிரான்ஸ், டென்மார்க், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஸ்வீடன், ஹங்கேரி, ஐஸ்லாந்து, ஆஸ்திரியா மற்றும் பெல்ஜியம் ஆகிய மாநாடுகளுக்கு அனுப்பப்பட்டன.
e-Vitara வாகனம் HEARTECT-e எனப்படும் புதிய மின்சார வாகன தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது பாரம்பரிய பெட்ரோல்/டீசல் வாகன வடிவமைப்பிலிருந்து மாறுபட்டது.
இந்த தளம் மின்சார இயக்க அமைப்பிற்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
e-Vitara கார்களை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ள மாருதி சுசுகி நிறுவனம், இதன்மூலம் இந்தியாவை உலகளாவிய மின்சார வாகன உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கில் செயல்பட்டுவருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Maruti Suzuki e VITARA, e VITARA electric SUV, Maruti EV export 2025, India electric vehicle exports, Suzuki EV Europe, HEARTECT-e platform, Gujarat EV manufacturing, Pipavav Port exports, Make in India EV, Maruti electric car launch