மாருதி சுசூகியின் புதிய SUV Escudo வெளியீடு உறுதி
மாருதி சுசூகி இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை சீசனில் புதிய மிட்-சைஸ் எஸ்யூவியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
Escudo என பெயரிடப்படும் இந்த எஸ்யூவி, Brezza மற்றும் Grand Vitara ஆகியவற்றுக்கு இடைப்பட்ட வகையில் இருக்கும்.
Hyundai Creta மற்றும் Kia Seltos போன்ற முன்னணி எஸ்யூவிகளை நேரடியாக போட்டியிடும் வகையில், Escudo, Global-C பிளாட்ஃபாரத்தில் உருவாகிறது. இது விசாலமான interior அமைப்புடன், சுமார் 4345mm நீளத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது 5 Seatet SUV-யாகவே இருந்தாலும், பெரிய பூட் ஸ்பேஸும் நீளமான வீல் பேஸும் இருக்கும். கிராண்ட் விட்டாராவின் சில வடிவமைப்பு அம்சங்களை மாற்றி பயன்படுத்தும் வகையில் இது உருவாகிறது.
எஞ்சின் விருப்பங்களில், 1.5 லிட்டர் பெட்ரோல் (104bhp), CNG (88bhp) மற்றும் மைக்ரோ ஹைபிரிட் (116bhp) மாடல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எரிபொருள் செலவைக் குறைக்கும் நோக்குடன் மாருதி இவ்வாறு பல விருப்பங்களை வழங்குகிறது.
மேலும், Maruti தனது முதல் மின்சார எஸ்யூவி e-Vitara-வையும் 2025 செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்துகிறது. அதனால் ICE மற்றும் EV சந்தைகளில் இடம்பிடிக்க Escudo முக்கிய பங்கு வகிக்கவிருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Maruti Suzuki new 5-seater, Maruti Suzuki SUV Escudo, Maruti Suzuki Diwali Launch, Maruti Escudo SUV, Escudo Diwali launch, Maruti new SUV 2025, Maruti SUV Arena showroom, Escudo vs Creta, Maruti CNG SUV, Escudo boot space, Maruti Suzuki Escudo specs, Maruti SUV launches 2025, Escudo Grand Vitara platform