Swift மொடலுக்கு மிகப்பெரிய தள்ளுபடியை அறிவித்த Maruti Suzuki! எவ்வளவு தொகை?
சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஸ்விஃப்ட் (Swift) மொடலுக்கு மாருதி சுஸுகி நிறுவனம் (Maruti Suzuki) மிகப்பெரிய சலுகையை அறிவித்துள்ளது.
சலுகை அறிவிப்பு
மாருதி சுசுகி நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அதன் லேட்டஸ்ட் ஜெனரேஷன் ஸ்விஃப்ட் ( latest generation model of Swift) மொடலை (நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட்) அறிமுகப்படுத்தியது. இது முந்தைய மொடலை போலவே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்போது, மாருதி சுசுகி நிறுவனம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் புதிய மொடலுக்கு தள்ளுபடிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அவற்றை முன்பை விட மலிவு விலையில் ஆக்குகிறது.
தற்போது புதிய ஸ்விஃப்ட்டின் ஆட்டோமேட்டிக் டிரிம்களில் (automatic trims) ரூ.33,100 மற்றும் மேனுவல் டிரிம்களில் (manual variant ) ரூ.28,100 தள்ளுபடி வழங்கி வருகிறது.
ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்பிற்குச் சென்று பலன்களைப் பெறலாம்.
மாருதி சுஸுகி இந்த மொடலை தள்ளுபடி விலையில் பட்டியலிடுவது இது முதல் முறை அல்ல. கடந்த மாதம், தொழில்நுட்ப அம்சங்கள் உள்ள ஸ்விஃப்ட் வேரியண்ட்டிற்கு ரூ.15,000 தள்ளுபடி வழங்கியது.
இந்த பிரிவில் புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த மொடலின் முந்தைய தலைமுறை கார்களுக்கும் தள்ளுபடி வழங்கியுள்ளது.
முந்தைய தலைமுறை Swift-ன் பெட்ரோல் வேரியன்ட்ஸ்களுக்கு (petrol models) ரூ.28,100 வரையிலும், CNG வெர்ஷனுக்கு (CNG version) ரூ.18,100 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |