Maruti Suzuki கார்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி., எந்தெந்த மொடல்களுக்கு தெரியுமா?
முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி சுஸுகி (Maruti Suzuki), பல மொடல்களுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது.
இந்த மாதத்தில் Baleno, Fronx, Gimny மற்றும் பிற மோதல்கள் ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது.
இவை தவிர, XL6, Ignis, Grand Vitara Mild Hybrid மற்றும் Turbo-Petrol வகை Fronx மீதும் இந்த தள்ளுபடி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த தள்ளுபடிகள் புதிய நிதியாண்டின் முதல் மாதத்தில் (April) கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.

இவற்றில், நிறுவனம் ரொக்க தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்குகிறது.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட XL6 மற்றும் flagship Invicto MPV மாடல்களுக்கு இந்த தள்ளுபடிகள் பொருந்தாது என்று நிறுவனம் கூறியுள்ளது.
Maruti Ignis

Maruti Ignis மொடலுக்கு அதன் விலையில் குறைந்த்து ரூ.58 ஆயிரம் வரை தள்ளுபடி கிடைக்கும். இதில் ரொக்கமாக ரூ.40 ஆயிரமும், எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.15 ஆயிரமும், கார்ப்பரேட் தள்ளுபடியின் கீழ் ரூ.3 ஆயிரமும் குறைக்கப்படும்.
Baleno

சந்தையில் பிரபலமான பிரீமியம் ஹேட்ச்பேக் காரான Balenoவில் ரூ.35 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடியும், எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.15 ஆயிரமும், கார்ப்பரேட் தள்ளுபடியின் கீழ் ரூ.3 ஆயிரமும் கிடைக்கும்.
Ciaz

Multi-purpose மொடலான Ciaz மீது ரூ.53 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ரூ.25 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடியும், எக்ஸ்சேஞ்ச் போனஸின் கீழ் ரூ.25 ஆயிரமும், கார்ப்பரேட் தள்ளுபடியின் கீழ் ரூ.3 ஆயிரமும் குறைக்கப்படும்
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Maruti Suzuki Cars Price Discount, Baleno, Ciaz, Gimny, Ignis