ரூ.32,500 வரை கார்களின் விலையை உயர்த்தும் Maruti Suzuki
மாருதி சுஸுகி (Maruti Suzuki India) நிறுவனம் அடுத்த மாதம் முதல் அதன் அனைத்து கார்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.
புதிய விலைகள் பிப்ரவரி 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும். இந்த விலை உயர்வு ஒவ்வொரு மாடலுக்கு ஏற்ப மாறுபடும்.
கார்களின் விலை 1,500 ரூபாயில் இருந்து 32,500 ரூபாய வரை உயர்த்தப்படும் என்று மாருதி தெரிவித்துள்ளது.
முன்னதாக ஜனவரி மாதத்தில், நிறுவனம் அதன் வரிசையில் உள்ள அனைத்து மாடல்களின் விலையையும் 4% வரை உயர்த்தியது.
அதிகரித்து வரும் உள்ளீடு மற்றும் செயல்பாட்டு செலவுகள் காரணமாக மாருதி இந்த முடிவை எடுத்துள்ளது.
வாடிக்கையாளர்கள் மீது சில சுமையை ஏற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று நிறுவனம் கூறுகிறது.
அதிகபட்சமாக Celerio காருக்கு ரூ.32,500 அதிகரிக்கப்படுகிறது. அதே நேரத்தில் Ciaz, Zimny ஆகியவற்றின் விலை ரூ.1,500 வரை அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Maruti Suzuki Price Hike, Maruti Suzuki India to hike prices from Feb 1