Maruti Suzuki-யின் புதிய சாதனை.. இந்தியாவில் 3 கோடி கார்கள் உற்பத்தி
இந்தியாவில் நாற்பது ஆண்டுகளைக் கடந்து இயங்கிவரும் மாருதி சுஸுகி (Maruti Suzuki) இதுவரை 3 கோடி வாகனங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.
சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் 3 கோடி வாகனங்களை தயாரித்துள்ளது.
இந்தியா இந்த வாகனங்களை ஜப்பானை விட வேகமாக தயாரித்து சாதனை படைத்தது.
சுஸுகியின் (Suzuki) துணை நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா (Maruti Suzuki India), மார்ச் மாத இறுதிக்குள் 3 கோடி யூனிட்கள் என்ற மைல்கல்லை எட்டியது.
ஜப்பானில் இந்த மைல்கல்லை 55 ஆண்டுகள் 2 மாதங்களில் எட்டிய நிலையில், இந்தியாவில் 40 ஆண்டுகள் 4 மாதங்களில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் டிசம்பர் 1983 முதல் இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கியது. இதில், ஹரியானா ஆலையில் 2.68 கோடி வாகனங்களும், குஜராத் ஆலையில் 32 லட்சம் வாகனங்களும் உற்பத்தி செய்யப்பட்டன.
1983 டிசம்பரில் தொடங்கப்பட்டு, மார்ச் 1994-ல் 10 லட்சம் கார்கள் தயாரிக்கப்பட்டன. அது 2005 ஏப்ரலில் 50 லட்சம் கற்களாக உயர்ந்தன.
தொடர்ந்து, மார்ச் 2011-ல் 1 கோடி கார்களையும், ஜூலை 2018 2 கோடி கார்களையும், இப்போது மார்ச் 2023-ல் 3 கோடி கார்களையும் கடந்துள்ளது,
இந்த மைல்கல்லை எட்டியதில் மாருதி 800 முக்கிய பங்கு வகித்தது. இந்த மாடலின் 29 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.
உத்து தவிர அதிகம் விறபனையான கார் மொடல்களில் Alto 800, Alto K10, Swift, Wagon R, Dzire, Baleno, Brezza, Ertiga மொடல்கள் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Maruti Suzuki India, Maruti Suzuki 3 Crore Units, Suzuki Cars in India, History of Maruti Suzuki India