மாருதி சுசூகியின் முதல் Level-2 ADAS கார் Victoris அறிமுகம்
மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் Level-2 ADAS தொழில்நுட்பம் கொண்ட வாகனமான Victoris என்ற SUV-ஐ அறிமுகம் செய்துள்ளது.
இது Brezza-வின் மேல் நிலை மொடலாகவும், Arena வரிசையில் flagship SUV-யாகவும் விளங்குகிறது.
ரூ.11,000 முன்பணம் செலுத்தி ஓன்லைனிலும், Arena ஷோரூம்களிலும் முன்பதிவு செய்யலாம்.
Victoris-ன் முக்கிய சிறப்பம்சம் Level-2 ADAS தொழில்நுட்பம். இதில் 10-கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
- Adaptive cruise control with curve speed reduction
- Automatic emergency braking
- Lane keep assist
- Blind spot monitoring
- Rear cross-traffic alert
- High-beam assist
மேலும், 5 நட்சத்திர NCAP மதிப்பீடு, 6 Airbags, ESP, 360 டிகிரி HD Camera, TPMS, மற்றும் Auto Hold கொண்ட electronic parking brake ஆகியவை உள்ளன.
வெளிப்புறத்தில் LED Projector headlights, Roofrails, 17 இன்ச் aero-cut Alloy Wheels மற்றும் connected LED taillamps காரின் அழகை மேம்படுத்துகின்றன.
Raffin Package மூலம், dark Chrome, Skid Plate accents, dual-tone சீட் கவர்கள் போன்றவற்றை சேர்க்கலாம்.
10 வண்ணங்களில் கிடைக்கும், இதில் Mystic Green மற்றும் Eternal Blue என இரண்டு புதிய நிறங்கள் உள்ளன.
உட்புறத்தில் 10.25-inch digital instrument cluster, 10.01-inch SmartPlay Pro X infotainment system, wireless Apple CarPlay/Android Auto, OTA updates, Alexa Auto Voice AI கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும், Dolby Atmos 5.1 கொண்ட Infinity by Harman 8-speaker setup கொடுக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, ventilated seats, panoramic sunroof, 8-way powered driver's seat, powered tailgate with gesture controls, wireless charging with active cooling மற்றும் 64-colour ambient lighting போன்ற வசதிகளும் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Maruti Suzuki Victoris, Maruti Level-2 ADAS SUV, Victoris SUV launch India, Maruti Arena flagship SUV, ADAS cars under 15 lakhs, Maruti Victoris features, Victoris SUV booking, New Maruti SUV 2025, Brezza vs Victoris, Maruti Victoris safety rating