ஆபரேஷன் சிந்தூர் விளைவு; பயங்கரவாதிக்கு ரூ.14 கோடி இழப்பீடு வழங்கும் பாகிஸ்தான்?
பயங்கரவாத அமைப்பின் தலைவருக்கு, பாகிஸ்தான் அரசு ரூ.14 கோடி இழப்பீடு வழங்க உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கியழித்துள்ளது.
இந்த தாக்குதலில், பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது என்னும் பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் மற்றும் முரிட்கேயில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா மறைவிடங்கள் ஆகியவை தாக்கி அழிக்கப்பட்டன.
இதில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரி உள்ளிட்ட அவரது குடும்பத்தை சேர்ந்த 14 பேர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.
பயங்கரவாதிக்கு ரூ.14 கோடி இழப்பீடு
இந்திய மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் முடிவடைந்து அமைதிப்பேச்சுவார்தை நடைபெறும் நிலையில், இந்தியாவின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சட்டபூர்வ வாரிசுகளுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
கூடுதலாக, தாக்குதல்களின் போது சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் பாகிஸ்தான் அரசாங்கம் உதவும் என தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாருக்கு ரூ.14 கோடியை பாகிஸ்தான் அரசாங்கம் இழப்பீடு வழங்கும் என கூறப்படுகிறது.
சமீபத்தில் IMF அமைப்பு பாகிஸ்தானுக்கு 1.4 பில்லியன் டொலர் நிதி வழங்கிய நிலையில், அந்த நிதியில் இருந்துதான் பாகிஸ்தான் அரசாங்கம் பயங்கரவாதிக்கு நிவாரணம் வழங்க உள்ளதாக பாஜக ஐடி பிரிவுத் தலைவர் அமித் மாளவியா விமர்சித்துள்ளார்.
The Pakistan government has announced plans to reconstruct homes associated with JeM and LeT that were destroyed by India during #OperationSindoor, and to provide Rs 1 crore in compensation to the families of those killed in the airstrikes. As a result, designated terrorist… pic.twitter.com/o5aKMvX6Ef
— Amit Malviya (@amitmalviya) May 14, 2025
IMF உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் நிதிகளை பாகிஸ்தான் உரிய நோக்கத்திற்கு பயன்படுத்தாமல், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்க பயன்படுத்துவதாக இந்தியாவின் குற்றச்சாட்டை மீறியும், IMF நிதியளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |