உலக அளவில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சீர்குலைவு: தரையிறக்கப்பட்ட விமானங்கள்!
உலக அளவில் தொழில்நுட்ப சீர்குலைவு காரணமாக பல்வேறு துறைகளின் வேலைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
வங்கிகள், விமான சேவைகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தொலைக்காட்சி & வானொலி நிலையங்கள், மற்றும் மளிகை கடைகள் உட்பட பல நிறுவனங்கள் இயங்க இயலாத நிலைக்கு(global outage) தள்ளப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் பெரும்பாலான விமானங்கள் தரை இறக்கப்பட்டுள்ளன.
இந்த தொழில்நுட்ப சீர்குலைவு இயங்காமை உலக அளவில் விண்டோஸ் கணினிகளை(Windows PCs) பாதிக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியாவில் முதலில் வெள்ளிக்கிழமை முன்பகுதியில் இந்த பிரச்சனை வெளிப்பட்டது. அங்கு, பயனர்கள் தங்களது அலுவலக கணினிகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, இந்தியா, அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் பயனர்கள் புகார்களைத் தெரிவித்துள்ளனர்.
இது, உலக அளவில் பரவலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனையின் சரியான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |