போலந்தில் 8,000 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட எச்சங்கள் கண்டுபிடிப்பு!
போலந்தில் நாசி ஜேர்மனியின் முன்னாள் முகாமில் 8,000 பேரின் எச்சங்கள் கொண்ட வெகுஜன புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.
போலந்தில், முன்னாள் நாசி வதை முகாமுக்கு அருகில் சுமார் 8,000 பேருக்கு சமமான மனித சாம்பலைக் கொண்ட வெகுஜன புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போலந்தின் நாசி ஆக்கிரமிப்பு மற்றும் கம்யூனிஸ்ட் சகாப்தத்தின் போது நடந்த அட்டூழியங்களை ஆராயும் நாட்டின் தேசிய நினைவக நிறுவனம், எச்சங்கள் இப்போது வார்சாவின் வடக்கே உள்ள டிஜியால்டோவோ என்று அழைக்கப்படும் சோல்டாவ் வதை முகாமுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டதாக புதன்கிழமையன்று அறிவித்தது.
தகவல்களின்படி, சுமார் 17.5 டன்கள் (15,800 கிலோகிராம்கள்) மனித சாம்பல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறைந்தது 8,000 நபர்கள் இறந்ததாகக் கூறப்படுவதை ஆதரிக்கிறது என்று புலனாய்வாளர் டோமாஸ் ஜான்கோவ்ஸ்கி கூறினார்.
அறிக்கையின்படி, 8000 பேர் எனும் மதிப்பீடு எச்சங்களின் எடையை அடிப்படையாகக் கொண்டது. இரண்டு கிலோகிராம் என்பது ஒரு மனித உடலுக்கு தோராயமாக சமமான எச்சம் என கருதப்படுகிறது.
இரண்டாம் உலகப் போரில் போலந்தை ஆக்கிரமித்தபோது நாசி ஜேர்மனியால் இந்த முகாம் கட்டப்பட்டது. இது யூதர்கள், அரசியல் எதிரிகள் மற்றும் போலந்து அரசியல் உயரடுக்கின் உறுப்பினர்களுக்கு ஒரு போக்குவரத்துப் புள்ளியாகவும், சிறையில் அடைக்கப்பட்ட இடமாகவும், மரணதண்டனைக்கான இடமாகவும் பயன்படுத்தப்பட்டது.
சோல்டோவில் உள்ள கைதிகளின் இறப்புகளின் சரியான எண்ணிக்கை ஒருபோதும் தீர்மானிக்கப்படவில்லை, ஆனால் அது சுமார் 30,000 இருக்கலாம் என மதிப்பீடபட்டுள்ளது.
புலனாய்வாளர் டோமாஸ் ஜான்கோவ்ஸ்கியின் கூற்றுப்படி, வெகுஜன புதைகுழியில் இறந்தவர்களில் பெரும்பாலோர் 1939-ல் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் மற்றும் பெரும்பாலும் போலந்து உயரடுக்கினரைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
போர்க்குற்றங்கள் பற்றிய எந்த ஆதாரத்தையும் அழிக்க, நாசி அதிகாரிகள் 1944-ல் யூத கைதிகளை எரிக்க உத்தரவிட்டனர்.
கிடைத்த சாம்பலில் இருந்து மாதிரிகள் மீட்கப்பட்டு ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.