குருவிகளைப் போல் சுட்டு வீழ்த்தப்பட்ட மக்கள்... ஈரானிய இசைக்கலைஞர் வெளிப்படை
ஈரானில் போராட்டங்களில் பங்கேற்ற ஒரு ஈரானிய சொல்லிசை கலைஞர், தெருக்களில் அரசாங்கத்தால் படுகொலை நடந்ததாக தெரிவித்துள்ளார்.
தெருக்களில் வன்முறை
போராட்டங்களை ஒடுக்குவதற்காக வெளிநாட்டுப் படைகள் வரவழைக்கப்பட்டுள்ளன என்று இது உணர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் வசிக்கும் மெராஜ் தெஹ்ரானி, நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துக்கொண்டிருந்த நேரத்தில், ஜனவரி மாத தொடக்கத்தில் வணிகம் நிமித்தமாக ஈரானுக்குத் திரும்பியிருந்தார்.
ஆரம்பத்தில் நாட்டின் மோசமான பொருளாதாரத்தால் தூண்டப்பட்ட இந்த ஆர்ப்பாட்டங்கள், ஆளும் ஆட்சியையே சவால் விடும் அளவுக்கு வளர்ந்து, தெருக்களில் வன்முறைக்கு வழிவகுத்துள்ளன.
இந்த நிலையில், சனிக்கிழமையன்று, ஈரானின் உயர் தலைவர் அலி காமெனி, போராட்டங்களில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்டார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் ஒன்று தனது சமீபத்திய புள்ளிவிவரங்களில், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அதைத் தொடர்ந்த ஒடுக்குமுறையின் விளைவாக 2,885 போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் உட்பட 3,090 இறப்புகளைத் தாங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தெஹ்ரானி தெரிவிக்கையில், ஆரம்பத்தில் இவ்வளவு பேர் வருவார்கள் என்று அரசாங்கம் நம்பவில்லை என்று நினைக்கிறேன், அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். லட்சக்கணக்கான மக்கள் திரண்ட பிறகு இணைய சேவை விரைவாக முடக்கப்பட்டது.

சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் மாற்றத்தைக் கோரி போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர், நாடு ஒரு முழுமையான மாற்றத்திற்கு உள்ளாகி வருவதாகவே விவரிக்கின்றனர்.
அனைவரும் ஒன்றுபட்டு, நம்பிக்கையுடன் இருந்தனர், இதுதான் சரியான நேரம் என்று நினைத்தார்கள். முதல் முறையாக அனைவரும் ஒன்றாக ஒரே குரலில் முழக்கமிட்டனர் என தெஹ்ரானி தெரிவித்துள்ளார்.
மார்பிலும் தலையிலும்
ஆனால், போராட்டங்களை ஒடுக்க அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை முன்னெடுத்தது. ஜனவரி 9 ஆம் திகதி பெரும்பாலான கொலைகள் அப்போதுதான் தொடங்கின என்று தெஹ்ரானி கூறியுள்ளார்.
ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் களமிறங்கியபோதுதான், எல்லாமே தீவிரமடைந்தது, அதன் பின்னர் தெருக்களில் ஒரு படுகொலையாக மாறியது என்று அவர் கூறினார்.

போராட்டக்காரர்களை கண்மூடித்தனமாகச் சுடுவதற்கு இயந்திரத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். ஈராக்கின் சிறப்புப்படை களமிறக்கப்பட்டிருக்கலாம் என நம்புவதாகவே தெஹ்ரானி குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் மார்பிலும் தலையிலும் சுட்டு படுகொலையை நிகழ்த்தியதாக தெரிவித்துள்ளார். எந்தவொரு நாட்டிலும் ஒரு தனிநபரின் உயிருக்கும் மதிப்பு உண்டு, ஆனால் இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரானில் ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டுவிட்டன, ஒருவேளை இரண்டு மாதங்களுக்கும் குறைவானவை என்று குறிப்பிட்ட அவர், சர்வதேச சமூகத்தால் ஈரான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்ததாகக் கூறினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |