இதுவரை இல்லாத மிக மோசமானதாக இருக்கும்... ஈரானுக்கு எதிராக வியூகம் வகுக்கும் ட்ரம்ப்
ஈரான் மீது இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமானத் தாக்குதல் ஒன்றை முன்னெடுப்பது தொடர்பில் முடிவெடுத்து வருவதாக டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அனைத்து ஏற்பாடுகளையும்
ஆக்சியோஸ் (Axios) செய்தித் தளத்திடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தாம் மிகப்பெரிய தாக்குதல் ஒன்றைப் பற்றிப் பரிசீலித்து வருவதாகவும், முன்னெப்போதையும் விடப் பெரிய அளவிலான தாக்குதலாக அது இருக்கும் எனவும்,

அது தொடர்பில் ஒரு முடிவை எடுக்கும் நிலைக்கு நெருங்கிவிட்டதாகவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமது நிர்வாகம் செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவுகோலான ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டொலர் என்ற குறியீட்டு அளவைத் தாண்டி மீண்டும் உயர்ந்த நிலையில், விலை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகளுக்கு மத்தியிலேயே ட்ரம்ப் இக்கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிராக அத்தகைய முடிவால் விளைவுகள் ஏற்படும் என்பதை ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஆனால், அப்படியாக ஒரு தாக்குதல் குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அப்படியான ஓரு மோசமானத் தாக்குதல் முன்னெடுக்க இஸ்ரேலின் உதவி கோரினால், அவர்கள் இரண்டே நிமிடத்தில் பதிலளிப்பார்கள் என்றும், ஆனால் எவரின் உதவியையும் அமெரிக்கா இந்த விவகாரத்தில் நாடப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீது தொடர்ந்து 13-வது இரவாக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த தாக்குதல்களை அமெரிக்கா நடத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு புதிய வியூகம் அமைத்து வருவது குறித்து ட்ரம்ப் பேசியுள்ளார்.

ஈரானுக்கு எதிராக
இருப்பினும், ஈரான் மீது நாளுக்கு நாள் தீவிரமானத் தாக்குதலையே அமெரிக்கா முன்னெடுத்து வருகிறது. மேலும், செங்கடலில் சவுதி அரேபியாவின் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஏமன் போராளிக் குழுவினர் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்தே தற்போது ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
முன்னதாக ஈரானில் இருந்து தனது தூதரகப் பணியாளர்களைத் தற்காலிகமாகத் திரும்பப் பெறுவதாக புதன்கிழமை பிரித்தானியா அறிவித்தது. மேலும், செங்கடலில் இருந்து இரண்டு கப்பல்களைத் திரும்பப் பெறுவதாக ஜேர்மானிய இராணுவம் வியாழக்கிழமை அறிவித்தது.

இதனிடையே இஸ்ரேலிய நகரங்கள் குண்டுத் தடுப்புப் புகலிடங்களைத் திறந்த நிலையில், அப்பகுதியில் வசிக்கும் அமெரிக்கர்களுக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்படக்கூடும் என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சகம் எச்சரித்தது.
சூயஸ் கால்வாயை செங்கடல் மற்றும் ஏதன் வளைகுடாவுடன் இணைக்கும் இரண்டாவது முக்கிய கடல் வழித்தடத்தின் பாதுகாப்பிற்கு ஹவுதிகளின் தாக்குதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.
மட்டுமின்றி, ஈரான் 10 நாட்களுக்கு முன்பு ஹவுதிகளுக்கு ராணுவ ஆலோசகர்களையும் ட்ரோன் பாகங்களையும் அனுப்பியதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், சவுதி அரேபியா கப்பல்கள் மீது தாக்குதல் நடந்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |