ரஷ்யாவின் பிரபலமான மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: போராடும் தீயணைப்பு வீரர்கள்
ரஷ்யாவின் பரபரப்பான நகரம் ஒன்றில் அமைந்துள்ள மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவில் பயங்கர தீ விபத்து
ரஷ்யாவின் பிரபலமான நகரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மிகப்பெரிய மார்க்கெட் பகுதியில் எதிர்பாராத விதமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் போது, அப்பகுதியில் இருந்து பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதுடன், தீ மளமளவென்று பரவி எல்லா பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.

மேலும் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் பீதியில் அலறியடித்து ஓடினர்.
தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மார்க்கெட் கட்டிடத்தின் பெரும் பகுதி தீக்கிரையாகியுள்ளன.

சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்க தீவிரமாக செயல்பட்டனர்.
அதே சமயம் தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |