நாடொன்றில் பாரிய நிலச்சரிவு: மீட்புப் பணி தீவிரம்
சீனாவில் பாரிய நிலச்சரிவொன்று ஏற்பட்டதில், பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
சீனாவில் பாரிய நிலச்சரிவு
சீனாவின் Chongqing நகரில் இன்று காலை 9.08 மணியளவில் பாரிய நிலச்சரிவொன்று நிகழ்ந்துள்ளது.

நிலச்சரிவால் பல வீடுகள் இடிந்து நொறுங்கியுள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் சுமார் 100 மீட்புக்குழுவினரும் 200 தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டுவருகின்றனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 9 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலரைக் காணவில்லை என கூறப்படுகிறது.
மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |