பிரெஞ்சு கிராமம் ஒன்றில் திடீர் நிலச்சரிவு: மண்ணில் புதைந்த மக்கள்
பிரான்சிலுள்ள கிராமம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டதில், பல வீடுகள் மண்ணில் புதைந்தன, மண்ணுக்குள் சிக்கிய இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளார்கள்.
பிரெஞ்சு கிராமம் ஒன்றில் திடீர் நிலச்சரிவு
புதன்கிழமை இரவு, பிரான்சிலுள்ள செரோன் என்னும் கிராமத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

நிலச்சரிவில், அங்கிருந்த பதினொரு வீடுகளில் ஐந்து வீடுகள் சேதமடைந்தன. 21 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
கனமழையைத் தொடர்ந்து அந்த நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், இரண்டு பேர் மண்ணில் புதைந்துள்ளனர். லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட அவர்கள் இருவரும், அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீயணைப்பு வீரர்கள், ட்ரோன்கள், மோப்ப நாய்கள் மற்றும் மீட்புக் குழுக்கள் உதவியுடன் மேலும் யாராவது மண்ணில் புதைந்துள்ளனரா எனத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் நிலச்சரிவு, சுமார் இரண்டு கிலோமீட்டர் உயரத்தில் துவங்கி, கிட்டத்தட்ட 2,500 சதுர மீட்டர் பரப்பளவை மூடியதாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையில், தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், மாற்று வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எப்போது மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவார்கள் என்பதை கணிக்க முடியாத நிலை காணப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |