கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான்? U19 உலக கிண்ணத்தில் வெடித்த சர்ச்சை
U19 உலகக்கிண்ண தொடர், ஜனவரி 15 ஆம் திகதி தொடங்கி, பிப்ரவரி 6 ஆம் திகதி வரை ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான் ஜிம்பாப்வேவுடன் மோதிய தனது கடைசி லீக் போட்டியில், விளையாடிய விதம் காரணமாக சூதாட்டத்தில் ஈடுபட்டதா என்ற சர்ச்சை எழுந்தது.
நிதானமாக ஆடிய பாகிஸ்தான்
நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பாட்டம் ஆடிய ஜிம்பாப்வே அணி, 35.5 ஓவர்களில் 128 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

129 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 10.5 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 68 ஓட்டங்களை எட்டியது.
அதன் பின்னர் மிக மெதுவாக ஆடி, 128 ஓட்டங்கள் என்ற இலக்கை 26.2 ஓவர்களிலே அடைந்தது.

பாகிஸ்தான் அணி, 25.1 ஓவர்களில் இந்த இலக்கை துரத்தி வெற்றியைப் பெற்றுவிட்டால், ஜிம்பாப்வேவிற்கு பதிலாக புள்ளிகள் மற்றும் NRR அடிப்படையில் ஸ்காட்லாந்து சூப்பர் 6 உள்ளே நுழைய வாய்ப்பிருந்தது.
கிரிக்கெட் சூதாட்டமா?
மெதுவாக விளையாடி, ஜிம்பாப்வே அணியின் NRR விகிதத்தை அதிகரித்து அதன் மூலம் ஸ்காட்லாந்து அணியை சூப்பர் 6 சுற்றுக்குள் நுழைய விடாமல் தடுப்பதற்காகவே பாகிஸ்தான் இவ்வாறு ஆடியதாக பலரும் குற்றஞ்சாட்டினர்.

சிலர் பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டினர். முன்னதாக 2010 ஆம் ஆண்டில் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் பட் உள்ளிட்ட 3 வீரர்களுக்கு சிறை மற்றும் விளையாட தடை விதிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும், பாகிஸ்தானின் இந்த மெதுவான ஆட்டம் குறித்து சந்தேகம் தெரிவித்திருந்தார்.
Got the Pak’s U-19 deliberately ‘slowing down’ context wrong. Only the NRR against the qualified teams go to the Super-6 stage I this U-19 WC.
— Aakash Chopra (@cricketaakash) January 23, 2026
Since the margin of Pak’s victory over Scotland was a lot smaller as compared to Zimbabwe, they carried forward better NRR by allowing…
இதன் பின்னர் பதிவை நீக்கிய ஆகாஷ் சோப்ரா, பாகிஸ்தானின் நிதானமான ஆட்டத்திற்கு ஐசிசி விதிப்படி இடமுள்ளது. நான் தவறாக புரிந்து கொண்டேன் என விளக்கமளித்துள்ளார்.
இதன் பின்னர், இது கிரிக்கெட்டில் உள்ள அணியின் மூலோபய உத்தி என ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் ஆண்டி பிளவர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |