ஜிம்பாப்பேவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஹென்றி! அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்..போராடும் கேப்டன்
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜிம்பாப்பே அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது.
ஜிம்பாப்பே துடுப்பாட்டம்
நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்பேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் புலவாயோவில் இன்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்பே துடுப்பாட்டத்தை தெரிவு செய்து முதலில் களமிறங்கியது.
தொடக்க வீரர் பிரையன் பென்னெட் 6 ஓட்டங்களில் மேட் ஹென்றி (Matt Henry) ஓவரில் அவுட் ஆனார்.
ஹென்றி மிரட்டல்
அதனைத் தொடர்ந்து பென் கர்ரன் 13 ஓட்டங்களில் ஹென்றி பந்துவீச்சில் வில் யங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதன் பின்னர் சீன் வில்லியம்ஸ் 2 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, சிக்கந்தர் ரஸாவின் (2) விக்கெட்டையும் ஹென்றி கைப்பற்றினார்.
இதனால் ஜிம்பாப்பே அணி 69 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அணித்தலைவர் கிரேக் எர்வின் அணியை மீட்க போராடி வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |