யாரும் எதிர்பாராத வீரரை இந்தியாவுக்கு எதிராக.,களமிறக்கும் அவுஸ்திரேலியா: அணி அறிவிப்பு
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் விளையாட உள்ள அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மிட்செல் மார்ஷ்
அவுஸ்திரேலியாவில் இந்த மாதம் முதல், இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து நீண்ட தொடர்களில் விளையாட உள்ளது.
மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ள அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் அணியில் முதல் முறையாக மேத்யூ ரென்ஷா (Matthew Renshaw) இடம்பிடித்துள்ளார்.
மேத்யூ ரென்ஷா
29 வயதாகும் இவர், 14 டெஸ்ட் போட்டிகளில் 645 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
எனினும், பிக்பாஷ் லீக் தொடர்களில் மிரட்டலாக விளையாடக்கூடியவர் என்பதால், ஒருநாள் தொடரில் இவரது ஆட்டம் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட் போன்ற மிரட்டலான வீரர்களும் ஒருநாள் அணியில் உள்ளனர். டி20 அணியைப் பொறுத்தமட்டில் டிம் டேவிட், மேத்யூ ஷார்ட், மேட் குஹனேமன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகிற 19ஆம் திகதி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |