19 மாதங்களுக்குப் பிறகு...மன்னர் சார்லசை சந்தித்தார் இளவரசர் ஹரி
இளவரசர் ஹரி மற்றும் ராஜ குடும்ப ரசிகர்களுக்கு பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
ஆம், 19 மாதங்களுக்குப் பிறகு தன் தந்தையான மன்னர் சார்லசை சந்தித்துள்ளார் இளவரசர் ஹரி!
19 மாதங்களுக்குப் பிறகு...
2016ஆம் ஆண்டு மேகன் மார்க்கல் என்னும் அமெரிக்க நடிகையை சந்தித்தார் இளவரசர் ஹரி. அவர் ஏற்கனவே Trevor Engelson என்னும் திரைப்படத் தயாரிப்பாளரை திருமணம் செய்து விவாகரத்தும் பெற்றிருந்தார்.
ராஜ குடும்பத்தைப் பொருத்தவரை, ஒரு அமெரிக்கப் பெண்ணை, அதுவும் விவாகரத்தான பெண்ணை திருமணம் செய்துகொள்வது என்பது பெரும் சர்ச்சைக்குரிய விடயமாகும்.
1936ஆம் ஆண்டு, மன்னர் எட்டாம் ஜார்ஜ் விவாகரத்தான அமெரிக்கப் பெண்ணான வாலிஸ் சிம்ப்சன் என்னும் பெண்ணை திருமணம் செய்துகொள்ள உறுதியாக இருந்ததால் தன் அரியணையையே துறக்க நேர்ந்தது.
ஆக, இந்த திருமணம் வேண்டாம் என பலரும் ஹரிக்கு அறிவுரை கூறியும் கேட்காமல் 2018ஆம் ஆண்டு மேகனை திருமணம் செய்தார் ஹரி.
ஹரியை திருமணம் செய்துகொண்டு ராஜ வாழ்க்கை வாழலாம் என்னும் கனவுடன் வந்த மேகனால் ராஜ குடும்பக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க முடியவில்லை.
ராஜ குடும்பத்தில் அவர் கால் வைத்த நாள் முதல் ஒரே பிரச்சினை. 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி, ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து விலகினார்கள் ஹரியும் மேகனும்.

பிரித்தானியாவில் உணவு வங்கிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்னும் நிலைமை... தொண்டு நிறுவனம் குற்றச்சாட்டு
2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவுக்குக் குடிபெயர்ந்த ஹரி மேகன் தம்பதி அங்குதான் குடும்பத்துடன் வாழ்ந்துவருகிறார்கள்.
ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறியதும், ஹரியும் மேகனும் தொலைக்காட்சிகளுக்கு கொடுத்த பேட்டிகளிலும், ஹரி தனது சுயசரிதைப் புத்தகத்திலும் மன்னர், ராணி, இளவரசர் வில்லியம் மற்றும் கேட் குறித்து மோசமாக விமர்சித்ததால் அவர்களுக்கும் ராஜ குடும்பத்துக்கும் இடையே பிளவு உருவானது.
இந்நிலையில், கடந்த ஆண்டு, அதாவது, 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தன் தந்தையான மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்ததும் தன் தந்தையைக் காண ஓடோடிவந்தார் ஹரி.
அதற்குப் பிறகு, அதாவது, சுமார் 19 மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் ஹரி தன் தந்தையை சந்தித்துள்ளார்.
ராஜ குடும்ப ரசிகர்களுக்கு பெரு மகிழ்ச்சி
ராஜ குடும்பம் பிரிந்ததால் கவலையில் ஆழ்ந்திருந்த ராஜ குடும்ப ரசிகர்களுக்கு பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அந்த சந்திப்பு நேற்று, அதாவது, செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி நிகழ்ந்துள்ளது.
விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக ஹரி லண்டன் வர, ஸ்கொட்லாந்திலிருக்கும் பால்மோரல் மாளிகையில் தங்கியிருந்த மன்னர் சார்லஸ் லண்டனுக்கு விரைய, தந்தையும் மகனும் சந்தித்துக்கொள்வார்களா என ராஜ குடும்ப ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க, உண்மையாகவே தந்தையும் மகனும் சந்தித்துக்கொண்டார்கள்!
மன்னர் சார்லஸ் ஹரியை தனது கிளாரன்ஸ் இல்லத்தில் தேநீர் அருந்த வருமாறு அழைக்க, அவர் நேற்று மாலை 5.20 மணிக்கு அங்கு சென்றுள்ளார்.
சுமார் 53 நிமிடங்கள் இருவரும் அளவளாவிக்கொண்டதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது குறித்த விடயங்கள் எல்லாம் வெளியாகவில்லை என்றாலும், மன்னர் ஹரியின் பிள்ளைகளும் தனது பேரப்பிள்ளைகளுமான ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டை சந்திக்க ஆர்வமாக உள்ள நிலையில், மன்னர் சார்லஸ் ஹரி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |