அப்போதே எனது நாட்கள் முடிந்துவிட்டன! சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த அதிரடி வீரர்
அவுஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் துடுப்பாட்ட வீரர் மேத்யூ வேட், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மேத்யூ வேட்
2011யில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர் மேத்யூ வேட் (Matthew Wade). விக்கெட் கீப்பரான இவர் அதிரடியாக விளையாடக்கூடிய துடுப்பாட்ட வீரரும் ஆவார்.
ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அவுஸ்திரேலிய அணியில் இவரின் பெயர் இடம்பெறவில்லை.
இந்நிலையில் மேத்யூ வேட் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சர்வதேச நாட்கள் முடிந்துவிட்டன
ஓய்வு குறித்து வேட் கூறுகையில், "கடந்த டி20 உலகக்கிண்ணத் தொடரின் முடிவில் எனது சர்வதேச நாட்கள் முடிந்துவிட்டன என்பதை நான் முழுமையாக அறிந்தேன்.
எனது சர்வதேச ஓய்வு மற்றும் பயிற்சியாளர் பதவி என்பது கடந்த ஆறு மாதங்களாக ஜார்ஜ் பெய்லி மற்றும் ஆண்ட்ரூ மெக்டொனால்டு ஆகியோருடன் தொடர்ந்து உரையாடலாக இருந்தது.
கடந்த சில ஆண்டுகளாக பயிற்சி எனது ரேடாரில் உள்ளது. அதிர்ஷ்டவசமாக சில சிறந்த வாய்ப்புகள் எனக்கு வந்துள்ளன. அதற்காக நான் மிகவும் நன்றியுடனும் உற்சாகத்துடனும் இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய அணிக்காக 97 ஒருநாள் போட்டிகளில் 1867 ஓட்டங்களும், 92 டி20 போட்டிகளில் 1202 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.
அதேபோல் 36 டெஸ்ட் போட்டிகளில் 4 சதங்களுடன் 1613 ஓட்டங்கள் குவித்துள்ளார். 15 ஐபிஎல் போட்டிகளிலும் வேட் விளையாடியுள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |