பிரித்தானியாவிடம் இருந்து தீவினை பெற முயற்சி: அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அறிவித்த அரசு
மாலத்தீவு குடியரசுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் மொரிஷியஸ் குடியரசு உடனடியாக நிறுத்தி வைத்துள்ளது.
சாகோஸ் தீவுக்கூட்டம்
காலனித்துவ ஆட்சி பிடியின் கீழ் இருக்கும் சாகோஸ் தீவுக்கூட்டத்தை, பிரித்தானியாவிடம் இருந்து பெற மொரிஷியஸ் முயற்சித்து வருகிறது.
ஆனால், மாலத்தீவும் சாகோஸ் தீவுக்கூட்டத்திற்கு உரிமை கோரி வருகிறது. இதனால் இரு தரப்பு அரசுகளுக்கும் பிணக்கு ஏற்பட்டது.
இந்த சூழலில் மொரிஷியஸ் வெளியுறவு, பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
மொரிஷியஸ் குடியரசு
அதில், "மொரிஷியஸ் குடியரசு மாலத்தீவு குடியரசுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் உடனடியாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த முடிவு, மாலத்தீவு அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட சமீபத்திய நிலைப்பாட்டைத் தொடர்ந்து வருகிறது.
இதன்மூலம், சாகோஸ் தீவுக்கூட்டத்தின் மீதான மொரிஷியஸ் குடியரசின் இறையாண்மையை, அதன் பிராந்திய ஒருமைப்பாட்டை இனி அங்கீகரிக்கவில்லை. மேலும், இப்போது மொரிஷியஸுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தை எதிர்க்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |