பூலோகத்தில் ஒரு சொர்க்கத்தை பார்க்க வேண்டுமா? அப்போ மொரீசியஸ் போங்க
மொரீஷியஸ் என்பது ஆபிரிக்கக் கண்டத்திலுள்ள ஒரு அழகிய தீவு. இங்கே ஹிந்தி, தமிழ்,பிரேஞ்சு, கிரியோல் போன்ற மொழிகள் பேசப்பட்டு வருகின்றன.
இந்தத் தீவானது சுற்றுலாத் துறை மூலமாக அதிகளவு வருமானத்தை ஈட்டிவருகின்றது. இங்கே ஏராளமான இந்துக் கோவில்கள் காணப்படுகின்றன.
மொரீஷியஸ் நாட்டில் கரும்பு உற்பத்தி சாகுபடி என்பன அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றது. இதிலிருந்து தயாராகம் வெள்ளை சர்க்கரையானது உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மொரீசியஸானது சுற்றுலாவுக்கென அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கிறது. மொரீசியஸில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், இங்கே சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு கடலோர சொகுசு விடுதிகள் பலவும் உள்ளன.
இங்கே காணப்படும் பிளாக் ரிவர் காஜஸ் தேசிய பூங்காவில் அரிய வகை உயிரினங்களைக் காணலாம். இந்த நாட்டின் சிறப்பம்சங்களுள் ஒன்றாக திகழ்வது,ட்ரோவ் ஆக்ஸ் கடற்கரையாகும். இந்த இடத்தை பார்க்க வராத சுற்றுலாப் பயணிகளே இருக்க மாட்டார்கள் என்று கூறலாம்.
அதுமட்டுமில்லாமல் இங்குள்ள ப்ளூ பே மெரைன் பார்கில் கடல் டைவிங் செய்யலாம். மேலும் சஃபாரி அட்வென்சர்ஸ் பகுதியில் அன்பாக பழகும் புலிகளுடன் இணைந்து நடைப்பயிற்சியில் ஈடுபடலாம்.
இங்கே ஏழு வண்ணங்கள் நிறைந்த மணல் மேடுகள் நாட்டின் முக்கியமான சுற்றுலாத்தலமாக இருக்கின்றது. இங்கே பாதுகாப்பான முறையில் கொட்டும் அருவியின் எதிர்திசையில் ட்ரெக்கிங் செல்லவும் அனுமதி வழங்கப்படுகிறது.
அதுமாத்திரமின்றி இங்கே குறைவான கட்டணத்தில் சொகுசான தங்கும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகள் தங்கிச் செல்லலாம். கடல் விளையாட்டுக்கள் இங்கே அதிகமாகக் காணப்படுகின்றது.
இங்கே ஏழு நிற வண்ணங்களாக இயற்கையாக உருவாக்கப்பட்ட மணல்வெளிகள் இருக்கும் கேமரல் கலர் டு யத் என்கின்ற இடம் மிகவும் அழகானது. அதுபோக இயற்கையாக கடலுக்குள் நீர்வீழ்ச்சியைப் போன்று அமைந்திருக்கும் ஒரு மாயத்தோற்றம் கொள்ளையழகு.
இயற்கை சூழலில் இருக்கும் சேமரல், வோஸ்டர், சேமரின் பகுதிகளிலுள்ள நீர்வீழ்ச்சிகளை பார்த்து ரசிக்கலாம்.
இயற்கை எழில் கொஞ்சும் பூலோக சொர்க்கத்தை கண்டு ரசிக்க நீங்கள் குடும்பமாகவும் வரலாம். அல்லது ஹனிமூன் பயணமாகவும் வரலாம். எப்படி வந்தாலும் இது நல்லதொரு அனுபவமாக இருக்கும்.