இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் யார் வசம் அதிக பங்குகள்... நாராயண மூர்த்தியா, சுதா மூர்த்தியா?
கர்நாடக மாநிலத்தின் பெருமைகளில் ஒன்றாக, இளம் தலைமுறையினரின் கனவாக இருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் அதிக பங்குகள் யார் வசம் உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
7 இளைஞர்களால்
இன்ஃபோசிஸ் நிறுவனம் 43 ஆண்டுகளுக்கு முன்னர், 1981ல் 7 இளைஞர்களால் புனே நகரில் நிறுவப்பட்டது. தற்போது உலக நாடுகளில் செயல்பட்டு வந்தாலும், அதன் தலைமையகம் கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் அமைந்துள்ளது.
நாராயண மூர்த்தி, நந்தன் நிலேகனி, கிறிஸ் கோபாலகிருஷ்ணன், ஷுபுலால், தினேஷ், ராகவன் மற்றும் அசோக் அரோரா ஆகியோரால் நிறுவப்பட்டது. தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் யார் வசம் அதிக பங்குகள் உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
2023ல் வெளியான தரவுகளின் அடிப்படையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் அதிக பங்குகளை கொண்டுள்ளது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் என்றே தெரிய வந்துள்ளது. அந்த நிறுவனம் 9.531 சதவிகித பங்குகளை தங்கள் வசம் வைத்துள்ளது.
அதாவது 395,772,200 பங்குள் LIC நிறுவனம் சொந்தமாக வைத்துள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ 8,694 கோடி என்றே தெரிய வருகிறது. இதற்கு அடுத்து SBI வங்கி ரூ 3,840 கோடி மதிப்பிலான 174,813,735 பங்குகளை கைவசம் வைத்துள்ளது.
மூன்றாவதாக கிறிஸ் கோபாலகிருஷ்ணனின் மனைவி சுதா கோபாலகிருஷ்ணன் 2.297 சதவிகித பங்குகளை கைவசம் வைத்துள்ளார். எண்ணிக்கையில் 95,357,000 பங்குகள் எனவும், இதன் மதிப்பு ரூ 2,095 கோடி என்றே கூறப்படுகிறது.
மூர்த்தி குடும்பம்
இன்ஃபோசிஸை நிறுவியவர்களில் முதன்மையான நபரான நாராயண மூர்த்தியின் குடும்பம், கூட்டுப் பங்குதாரர் மூலம் நிறுவனத்தில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கின்றனர். இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி, அந்த நிறுவனத்தின் 0.36% பங்குகளை வைத்திருக்கிறார்.
தனது பேரப்பிள்ளைக்கு குறிப்பிட்ட சதவிகித பங்குகளை பரிசாக அளித்துள்ளதால், தற்போது அவருக்கான பங்கு சதவிகிதம் குறைந்துள்ளது. அவரது மனைவி சுதா மூர்த்தி நிறுவனத்தில் 0.93% பங்குகளை வைத்திருக்கிறார், அதே நேரத்தில் அவர்களின் மகள் அக்ஷதா மூர்த்திக்கு 1.05% பங்குகள் உள்ளன.
மூர்த்தி குடும்பத்தில் அதிக பங்குகளை வைத்திருப்பவர் ரோஹன் மூர்த்தி என்றே கூறப்படுகிறது. 1.465 சதவிகித பங்குகள் அதவாது 6.8 கோடி எண்ணிக்கையில் பங்குகளை சொந்தமாக வைத்துள்ளார்.
இது மட்டுமின்றி, இந்தியாவின் பிரபலமான பல நிறுவனங்களும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் குறிப்பிட்ட சதவிகித பங்குகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |