மெக்சிகோ காடுகளில் மறைந்திருந்த அதிசயம்! வெளிச்சத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகள்
மெக்சிகோ காடுகளில் புதைந்திருந்த மாயன் நாகரிகத்தின் ஆயிரக்கணக்கான கட்டமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ காடுகளில் மறைந்திருந்த அதிசயம்
மெக்சிகோவின் அடர்ந்த காடுகளின் ஆழத்தில், பிரமிடுகள் உட்பட ஆயிரக்கணக்கான தொன்மையான கட்டமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நியூ ஒர்லியன்ஸில்(New Orleans) உள்ள துலேன் பல்கலைக்கழகத்தைச்(Tulane University) சேர்ந்த லூக் ஆல்ட்-தாமஸ் (Luke Auld-Thomas) தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், யுகாத்தான்(Yucatan) தீபகற்பத்தில் உள்ள காம்பெச்சே(Campeche) மாநிலத்தின் தெற்குப் பகுதியில் மாயன் நாகரிகத்துடன் தொடர்புடைய 6,600 க்கும் மேற்பட்ட கட்டமைப்புகளை கண்டுபிடித்துள்ளனர்.
லேசர் மூலம் மேலிருந்து நிலத்தை ஸ்கேன் செய்யும் நவீன தொழில்நுட்பமான லைடார் தரவை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இந்த அற்புதமான சாதனை நிகழ்த்தப்பட்டது.
இவற்றில் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று, அருகிலுள்ள நன்னீர் குளத்தின் பெயரிடப்பட்ட வலேரியானா(Valeriana) என்ற தொன்மையான நகரமாகும்.
இந்த நகர்ப்புற மையம், அடர்த்தியான குடியிருப்புகள் மற்றும் சிக்கலான நிலப்பரப்பு பொறியியல் மூலம் இணைக்கப்பட்ட மாபெரும் கட்டமைப்புகளின் இரண்டு முக்கிய மையங்களைக் கொண்டுள்ளது.
மாயன் நாகரிகம்
மீசோஅமெரிக்கா(Mesoamerica) மிகவும் செல்வாக்கு மிக்க நாகரிகங்களில் ஒன்றான மாயன் நாகரிகம் கி.பி 300 முதல் 900 வரை செழித்தோங்கியது.
சிக்கலான நகரங்கள், விமரிசையான சடங்கு கட்டிடங்கள் மற்றும் மாபெரும் கல் பிரமிடுகளுக்கு பெயர் பெற்ற மாயன்கள், இன்றைய மெக்சிகோ, ஹொண்டுராஸ்(Honduras), குவாத்தமாலா(Guatemala) மற்றும் எல் சல்வடோர்(El Salvador) ஆகிய நாடுகளில் நீடித்த பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |