உடனடியாக வெளியேறுங்கள்.. உக்ரேனியர்களுக்கு மேயர் உத்தரவு
உடனடியாக நகரை விட்டு வெளியேறுமாறு Boryspil நகர மேயர் மக்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நகரத்திற்கு அருகே மோதல் இடம்பெற்று வருவதால், மக்களை விரைவில் வெளியேறுமாறு உக்ரைனின் Boryspil நகரின் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Boryspil நகரம், மத்திய கியேவின் கிழக்கே 25 மைல் தொலைவில் உள்ளது. இந்நகரம் நாட்டின் மிகப் பெரிய விமான நிலையத்திற்கு அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Boryspil அமைந்துள்ள உக்ரைனின் கீவ் பகுதியில் கடுமையான சண்டை நடக்கும் என மேயர் Volodymyr Borysenk எச்சரித்துள்ளார்.
நகரைச் சுற்றி துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதால், நகரில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
பொதுமக்கள் புத்திசாலித்தனமாக இருக்குமாறும், எங்கள் அழைப்பு மையத்தை அணுகி, வாய்ப்பு கிடைத்தவுடன் நகரத்தை விட்டு வெளியேறுமாறும் நான் கேட்டுக்கொள்கிறேன் என Volodymyr Borysenk தெரிவித்துள்ளார்.