எம்பாப்பே இரட்டை கோல்., பிரான்ஸ் 3-1 வெற்றி
உலகக் கோப்பை 2026 தொடக்கப் போட்டியில், பிரான்ஸ் அணி செனெகலை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.
பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) இரண்டு கோல்கள் அடித்து, தனது உலகக் கோப்பை கோல் எண்ணிக்கையை 14-ஆக உயர்த்தியுள்ளார்.
உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த மிரோஸ்லாவ் க்லோஸேவின் (16) சாதனயை முறியடிக்க, எம்பாப்பேவிற்கு இன்னும் இரண்டு கோல்கள் மட்டுமே தேவை.

போட்டியின் முதல் பாதியில் பிரான்ஸ் சிரமப்பட்டாலும், இரண்டாம் பாதியில் எம்பாப்பே மற்றும் மைக்கேல் ஒலிசே (Michael Olise) இணைந்து தாக்குதலை தீவிரப்படுத்தினர்.
66வது நிமிடத்தில் ஒலிசே வழங்கிய பாஸை எம்பாப்பே கோலாக மாற்றினார். பின்னர், பிராட்லி பார்கோலா (Bradley Barcola) இரண்டாவது கோலை அடித்தார்.
செனெகல் வீரர் இப்ராஹிம் எம்பாயே (Ibrahim Mbaye) 95வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து வித்தியாசத்தை குறைத்தார். ஆனால், 96வது நிமிடத்தில் எம்பாப்பே நீண்ட தூரத்தில் அடித்த அற்புதமான ஷாட்டால் வெற்றியை உறுதி செய்தார்.

இந்த வெற்றியால், எம்பாப்பே பிரான்ஸ் அணியின் அனைத்துக் காலங்களிலும் அதிக கோல்கள் அடித்த வீரர் (58) என்ற பெருமையை பெற்றார். அவர் பீலே (12), மெஸ்ஸி (13) ஆகியோரையும் முந்தியுள்ளார்.
பிரான்ஸ் அடுத்ததாக ஈராக் மற்றும் நோர்வே அணிகளை எதிர்கொள்ள உள்ளது. பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப், தனது கடைசி உலகக் கோப்பை பயணத்தில், அணியை மூன்றாவது உலகக் கோப்பை வெற்றிக்குத் தயாராக்கியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |