மெஸ்ஸிக்கு ஒருமுறை இல்லை! FIFA வரலாற்றிலேயே இருமுறை Golden Boot வாங்கிய முதல் வீரர் இவர்தான்
FIFA உலகக்கிண்ண வரலாற்றில் இருமுறை தங்க காலணி விருதுபெற்று எம்பாப்பே சாதனை படைத்துள்ளார்.
தங்க காலணி
2026 FIFA உலகக்கிண்ணத் தொடரில் பிரான்ஸின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே 10 கோல்கள் அடித்தார்.
இதன்மூலம், அதிக கோல் அடித்த வீரருக்கு வழங்கப்படும் தங்க காலணி (Golden Boot) விருதை அவர் பெற்றார்.
கடந்த 2022 உலகக்கிண்ணத் தொடரிலும் இந்த விருதை பெற்றிருந்த அவர், FIFA வரலாற்றில் "இருமுறை" தங்க காலணி பெற்ற முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
ஒருமுறை கூட தங்க காலணி பெறாத லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) 8 கோல்கள் அடித்திருந்த நிலையில் இம்முறையும் தவறவிட்டார்.
2026 FIFA உலகக்கிண்ணத் தொடரில் விளையாடிய ஹாரி கேன் (இங்கிலாந்து) 2018-யிலும், கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்த்துகல்) 2002-ஆம் ஆண்டிலும் தங்க காலணி விருது பெற்றிருந்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |