உலகக்கிண்ணத்தை வென்ற மெஸ்ஸியை மோசமான வார்த்தையால் குறிப்பிட்ட எம்பாப்பே
பிரான்ஸ் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe), உலகக்கிண்ணத்தை வென்ற ஜாம்பவான் மெஸ்ஸியை மோசமான வார்த்தையால் குறிப்பிட்டதாக சக அணி வீரர் கூறியுள்ளார்.
மோசமான வார்த்தை
2022ஆம் ஆண்டு கத்தாரில் நடந்த உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா சாம்பியன் ஆனது.
அதனைத் தொடர்ந்து, பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியில் விளையாடி வந்த லியோனல் மெஸ்ஸியை (Lionel Messi) குறித்து, எம்பாப்பே மோசமான வார்த்தையை கூறியதாக சக அணி வீரர் ஜேவியர் பாஸ்டோர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ''கத்தார் இறுதிப்போட்டிக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, எம்பாப்பேயை PSG அணி பயிற்சி மற்றும் போட்டியில் விளையாட சென்றபோது பார்த்தேன். நான் அவருடன் லாக்கர் அறையில் இருந்தேன். எங்களுடன் மெஸ்ஸி, நெய்மாரும் இருந்தனர். அப்போது நான் உலகக்கிண்ணத்தை வென்றதற்கு அவரை வாழ்த்தினேன்.
அதற்கு எம்பாப்பே என்னிடம்: 'இல்லை, இந்த Son of b***h ஆகிய மெஸ்ஸி எங்களை வீழ்த்தினார்' என்று நகைச்சுவையாக அவர் (மெஸ்ஸி) வென்றது போல் கூறினார்'' என தெரிவித்துள்ளார்.
ரொனால்டோ, மெஸ்ஸியிடம் மட்டுமே
மேலும் அவர் எம்பாப்பே குறித்து கூறும்போது, 'அவர் அபாரமான மனநிலை கொண்டவர். எனக்கு அவரை நன்றாகத் தெரியும், அவருடன் எனக்கு நல்ல உறவு உள்ளது. அவர் ஒரு வெற்றியாளர், 100 சதவீதம் சண்டையிடுகிறார்.
அந்த வயதில் அவர் எவ்வளவு தீவிரமாக இருக்கிறார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அந்த தீவிரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியிடம் மட்டுமே காணப்பட்டது. கைலியன் எப்போதும் கவனம் செலுத்துகிறார்' என கூறினார்.
லியோனல் மெஸ்ஸி PSG அணிக்காக 75 போட்டிகளில் 32 கோல்கள் அடித்தார். தற்போது அவர் இன்டர் மியாமி கிளப்பில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.