சாண்ட்விச்சில் பன்றி இறைச்சியை கலந்ததாக மெக்டொனல்டுஸ் ஊழியர் மீது குற்றச்சாட்டு!
அமெரிக்காவில், இஸ்லாமிய கும்பத்தினர் ஆரடர் செய்த மீன் சாண்ட்விச்சில் வேண்டுமென்றே பன்றி இறைச்சியை வைத்ததாக மெக்டொனல்டுஸ் தொழிலாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இஸ்லாமிய பெண் ஒருவர், தனது குழந்தைகளுக்காக ஆர்டர் செய்த மீன் சாண்ட்விச்சில் மெக்டொனால்ட்ஸ் தொழிலாளர்கள் வேண்டுமென்றே, தீங்கு விளைவிக்கவும், அவமானப்படுத்தவும் மற்றும் துன்பத்தை உண்டாக்ஜுவதற்காகவும், அதில் பேக்கனைப் போட்டதாக பாகுபாடுகளுக்கு எதிரான மாநில ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
பன்றி இறைச்சி சாப்பிடுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க-இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்சில் (Cair) அந்தப் பெண்ணின் சார்பாக புகாரைப் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
CAIR வழக்கறிஞர் பார்பரா டூகன் (Barbara Dougan), புகார்தாரர் கூறப்படும் செயலுக்கு பண இழப்பீடு கோருவார் மற்றும் மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் தனது தொழிலாளர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.
புகாரளித்த பெண்ணான காதிர் அலஹ்மர் ஒரு அறிக்கையில், மத பாகுபாடு சட்டவிரோதமானது மற்றும் தார்மீக ரீதியாக கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.
மேலும் அந்த அறிக்கையில், சம்பவத்திற்குப் பிறகு, அந்த பெண்ணின் குழந்தைகள் உணவக தொழிலாளர்கள் தங்களை வெறுக்கிறார்களா என்று கேட்டதாகவும், இதற்கு ஒரு அம்மாவாக நான் என்ன பதிலை அவர்களுக்கு சொல்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர்களின் நடத்தை தனது குழந்தைகளை தேவையற்றவர்களாகவும், மதிப்பற்றவர்களாகவும் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த சம்பவத்தில் தனது சாண்ட்விச்சை உண்பதற்கு முன்பே அதில் பன்றி இறைச்சி இருப்பதாகி கவனித்துவிட்டதாக அவர் கூறினார்.