6 தொகுதிகளிலும் அதிமுகவுடன் மோதும் மதிமுக
திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ள 6 தொகுதிகளிலும் மதிமுக அதிமுகவுடன் மோதவிருக்கிறது.
எதிர்வரும் 6ம் திகதி ஒரே கட்டமாக தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர் பட்டியலை அறிவித்தவண்ணம் உள்ளன.
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகள் இன்று இறுதி செய்யப்பட்டன. மதிமுக வேட்பாளர்கள் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிட உள்ளனர்.
அதன்படி மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர், சாத்தூர், பல்லடம், அரியலூர், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் மதிமுக போட்டியிடுகிறது.
இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயாளர் வைகோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.
மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுகிறது. அதிமுக சார்பில் மதுரை தெற்கு தொகுதியில் எஸ்.எஸ்.சரவணன் போட்டியிடுகிறார்.
வாசுதேவநல்லூரில் ஏ.மனோகரன், சாத்தூரில் ஆர்.கே.ரவிச்சந்திரன், பல்லடத்தில் எம்எஸ்எம் ஆனந்தன், அரியலூரில் தாமரை எஸ்.ராஜேந்திரன், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் போட்டியிடுகின்றனர்.