திமுக கூட்டணியில் இருந்து விலகிய மதிமுக - எம்.எல்.ஏ எதிர்ப்பு

Marumalarchi Dravida Munnetra Kazhagam DMK
By Karthikraja Jun 27, 2026 09:51 AM GMT
Report

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதற்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக எம்.எல்.ஏ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் இருந்து விலகிய மதிமுக

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக, 4 தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தியது. 

திமுக கூட்டணியில் இருந்து விலகிய மதிமுக - எம்.எல்.ஏ எதிர்ப்பு | Mdmk Left From Dmk Alliance Mla Opposed Decision

இதில், கடையநல்லூர் மற்றும் சீர்காழியில் மதிமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இரு வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.

திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்து அமைச்சரவையில் இடம் பெற்ற நிலையில், மதிமுக எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றதால் நேரடி ஆதரவை வழங்க முடியவில்லை. 

திமுக கூட்டணியில் இருந்து விலகிய மதிமுக - எம்.எல்.ஏ எதிர்ப்பு | Mdmk Left From Dmk Alliance Mla Opposed Decision

த்ரிஷாவை துணை முதல்வராக்க விரைவில் அறிவிப்பு - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

த்ரிஷாவை துணை முதல்வராக்க விரைவில் அறிவிப்பு - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

இந்நிலையில், இன்று நடைபெற்ற மதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்த பொதுக்குழுவில், மதிமுகவின் தனித்துவ அடையாளத்தையும், 32 ஆண்டு கால தமிழ்நாட்டு மக்களுக்கான போராட்ட செயல்பாடுகளையும் நீர்த்துப்போக செய்யும் முயற்சிகள் நடைபெற்றதாகவும், அதிமுகவை ஆட்சி பீடத்தில் அமர்த்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தது ஊரறிந்த இரகசியமே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

திமுக கூட்டணியில் இருந்து விலகிய மதிமுக - எம்.எல்.ஏ எதிர்ப்பு | Mdmk Left From Dmk Alliance Mla Opposed Decision

2017 ஆம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுக, தற்போது கூட்டணியை முறித்து வெளியேறியுள்ளது.

எம்.எல்.ஏ எதிர்ப்பு

 உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கடையநல்லூர் எம்.எல்.ஏ தி.மு. இராசேந்திரன் வைகோவின் முடிவு தவறானது என விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "26.06.2026 தாயகத்தில் தலைவர் வைகோ அவர்களிடம் பேசியது என்ன? அன்புத் தலைவர் வைகோ அவர்களே உங்களை உண்மையாக நேசிக்கிறேன்...

கட்சி, சாதி, மதம் கடந்து நம்மை வெற்றிபெறச்செய்த கடையநல்லூர் தொகுதி மக்கள் நாள்தோறும் என்னிடம் வெளிப்படுத்தி வருகின்ற உணர்வினை மதித்தும், தலைவர் வைகோ அவர்கள் மீதோ, சட்டமன்ற உறுப்பினரான என் மீதோ களங்கம் படர்வதைத் தவிர்க்கும் பொருட்டும் பதவி விலகல் என்ற முடிவை மேற்கொள்ள வேண்டாம்.. 

தங்கள் அறிவுரைப்படி சட்டமன்றத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. கட்சி உணர்வோடு நான் இயங்கி வருவதையும், பேசியதையும் பாராட்டிச் சொன்னீர்கள்.

எனது சட்டமன்றச் செயல்பாடுகள் தகுதி நீக்கத்திற்கு வழிவகுத்தால் மகிழ்ச்சியுடன் பதவியைத் துறந்து மக்களிடம் முறையிடுவோம். இப்போது அவசரம் வேண்டாம். குறைந்தபட்சம் ஆறு மாதம் பொறுத்துஇருப்போம். தவிர, கூட்டணி குறித்து தாங்களும்,கட்சியும் எடுக்கும் முடிவை மதிக்கிறேன்.

எம்.ஜி.ஆரால் கலையுலக வாரிசாக அறிவிக்கப்பட்ட பாக்யராஜ் - அவர் பெயரிலே அரசியல் கட்சி

எம்.ஜி.ஆரால் கலையுலக வாரிசாக அறிவிக்கப்பட்ட பாக்யராஜ் - அவர் பெயரிலே அரசியல் கட்சி

மேற்கண்ட தகவல்களையும், இன்னும் சில பல செய்திகளையும் நேற்று (26.06.2026) பிற்பகல் 2 மணிக்கு தாயகத்தில் தலைவர் வைகோ அவர்களிடம் கண்ணீருடன் முறையிட்டேன்.

அதன் பின்னர் இரவு தலைவர் வைகோ அவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவை, பொதுக்குழுவில் என்னால் செயல்படுத்த இயலாது என்பதால் பொதுக்குழுவில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதை கழகப் பொருளாளர் மூலம் தலைவர் கவனத்திற்கு சொல்லி உள்ளேன்.

42 ஆண்டுகளாக தலைவர் வைகோ அவர்கள் மீது நான் வைத்திருக்கும் அன்பும், விசுவாசமும் உண்மையானது.

அதேபோல் "வாக்களித்த மக்கள் பெருமைப்படுகின்ற வகையிலும், வாக்களிக்காத மக்கள் இவருக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று நினைக்கின்ற வகையிலும் எனது செயல்பாடுகள் இருக்கும் என்று தொகுதி மக்களிடம் நானும், தலைவர் வைகோ அவர்களும் பேசி ஏற்படுத்தி வைத்திருக்கும் நம்பிக்கையும் உண்மையானது.

எஞ்சியுள்ள நம் வாழ்வில் எவ்வித களங்கமும் சுமக்க வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.. தலைவர் அவர்களே!எனது மேற்கண்ட கருத்துகள் உங்கள் நலனையும் உள்ளடக்கியது" என தெரிவித்துள்ளார்.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.      


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US