iPhone, iMac-ல் உள்ள i எதைக் குறிக்கிறது தெரியுமா?
Apple நிறுவனத்தின் iPhone, iPad, iMac போன்ற தயாரிப்புகளில் உள்ள 'i' என்ற எழுத்து எதை குறிக்கிறது என்பது பலருக்கும் புதிராக இருந்துள்ளது.
பலர் அதை internet என்பதை குறிக்கும் என கருதினாலும், உண்மையில் இந்த i-யில் ஐந்து முக்கிய அர்த்தங்கள் உள்ளன.
Steve Jobs-ன் பார்வையில் 'i'
1998ல் iMac அறிமுகப்படுத்தும்போது, ஸ்டீவ் ஜாப்ஸ் 'i' என்பது Internet, Individual, Instruct, Inform, Inspire ஆகிய ஐந்து முக்கிய கருத்துகளைக் குறிக்கும் என்று விளக்கியுள்ளார்.
i-யின் ஐந்து முக்கிய அர்த்தங்கள்
1. Internet - இணைய இணைப்பை எளிதாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டது.
2. Individual - தனிப்பட்ட பயனர் அனுபவத்தைக் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது.
3. Instruct - பயனர்களுக்கு புதிய திறன்களை கற்றுக்கொடுக்க உதவும் ஒரு கருவியாகும்.
4. Inform - தகவல்களை விரைவாக வழங்கும் வசதி கொண்டது.
5. Inspire - படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
தொடரும் மரபு
இந்தக் கருத்துகள் இன்றும் iPhone, iPad, iWatch போன்ற புதிய தயாரிப்புகளில் காணப்படுகிறது.
சமீபத்தில், Apple-ன் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வளர்ந்ததால், 'i' தற்போது 'intelligence' எனும் அர்த்தத்தையும் பெறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Apple Products, What is the meaning of i in iPhone, iPad, imac, meaning of i in Apple products