இந்த உணவு கொரோனா தீவிரத்தை குறைக்கும்! ஆய்வில் தெரியவந்த உண்மை
சைவ உணவு உண்பவர்கள் மற்றும் மீன் மட்டும் சாப்பிடுவோருக்கு கடுமையான கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரித்தானியா உட்பட 6 நாடுகளில் உள்ள சுகாதார ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தங்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா மற்றும் அவர்களின் உணவு முறைகள் குறித்து நோயாளிகள் இணையதளம் மூலம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பை பூர்த்தி செய்தனர்.
இந்த ஆய்வில், இறைச்சி சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடும் போது காய் கறிகள் மற்றும் மீன் மட்டும் சாப்பிடுபவர்களுக்கு கடுமையான கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என தெரியவந்தள்ளது.
குறைந்த கார்போஹைட்ரேட், உயர் புரத உணவுகள் சாப்பிடுபவர்களுக்கு மிதமான முதல் கடுமையான கொரோனா பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.