பிரித்தானியாவில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு... சில மருந்துகள் விலை 2,100 சதவிகிதம் உயர்வு
பிரித்தானியாவில் இதுவரை இல்லாத அளவில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் சாதாரணமாக பயன்படுத்தும் சில மருந்துகளின் விலை எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எச்சரிக்கும் மருந்தக உரிமையாளர்
இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டலில் இரண்டு மருந்தகங்கள் நடத்திவரும் மோ அல்மோபராக்கி (Mo Almobaraki, 57) என்பவர், அடிப்படை மருந்துகளான ஆஸ்பிரின், இதய நோய் சிகிச்சைக்கான மருந்துகள், இரத்த அழுத்தத்துக்கான மருந்துகள் போன்றவை கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளதாக தெரிவிக்கிறார். 3

20 ஆண்டுகளாக மருந்தகம் நடத்திவரும் மோ, இரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் statin வகை மருந்துகளின் விலை, ஒரே இரவில் ஒரு பவுண்டிலிருந்து 22 பவுண்டுகளாக, அதாவது, 2,100 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கிறார்.
எங்களுக்கும் அது கடினமான விடயமாக உள்ளது என்று கூறும் மோ, எங்களால் மருந்தை வரவைக்க முடியவில்லை என்றால், அது நோயாளிகள் நலன் மீது தாக்கத்தை ஏற்படுத்தும், நோயாளிகள் மருந்து இல்லாமல் இருக்கும் நிலை அல்லது மருந்துகளுக்காக கடை கடையாக அலையும் நிலை ஏற்படும் என்கிறார்.
அத்துடன், எங்களுக்கு கூடுதலாக இன்னொரு பிரச்சினை ஏற்படுகிறது, அது என்னவென்றால், மருந்துக்காக நாங்கள் பல்வேறு விநியோகஸ்தர்களை தொலைபேசியில் அழைக்கவேண்டியுள்ளது, மொத்த விற்பனையாளர்களை அழைக்கவேண்டியுள்ளது, மாற்று மருந்து ஏதாவது பரிந்துரைக்க முடியுமா என மருத்துவரை தொலைபேசியில் அழைக்கவேண்டியுள்ளது, அது மிகவும் கஷ்டமாக உள்ளது என்கிறார் மோ.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |